கர்பத்திற்கு பிறகு முதல் முறையாக தன் காதலரை அறிமுகப்படுத்திய இலியானா.. – வைரலாகும் பதிவு உள்ளே..

இலியானா தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில்  வைரல் பதிவு உள்ளே - Ileana shares first romantic pictures with his boy friend | Galatta

தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. தமிழ் சினிமாவில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் பின் தெலுங்கு திரைக்கு செல்ல அங்கு பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின் நீண்ட நாளுக்கு பின் தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை உற்சாகமடைய செய்தார். இலியான தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தியிலும் பிரபலம். இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை இலியானா கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக ஊடகத்தில் அறிவித்திருந்தார். திருமணம் ஆகாமல் குழந்தையா என்று அதிர்ச்சியுடன் ரசிகர்கள் கேள்வி எழுப்ப மறுபுறம் வாழ்த்துகளும் குவிந்து வந்தது. முதலில் இது திரைப்படம் தொடர்பான புரோமோஷன் என்று நம்பாமல் ரசிகர்கள் கேள்வி எழுப்ப பின் தனது பேபி பம்ப் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார் இலியானா. தொடர்ந்து நடிகை இலியானா தனது சமூக வலை தளங்களில் தனது கர்ப்ப கால புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஒருமுறை கூட தனது காதலர் யார் என்று அறிமுகப்படுத்தியதில்லை. ரசிகர்களும் காதலர் குறித்த கேள்விகளை எழுப்பி வந்த நிலையில். இலியானா தனது காதலரின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்துள்ளார்.

முகம் பெரிதளவு தெரியாத தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவர் பிரபலமா இல்லையா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் அந்த புகைப்படத்துடன் இலியானா,“கர்ப்பமாக இருப்பது ஒரு அழகான ஆசீர்வாதம்.. இதை அனுபவித்து வருமளவுக்கு நான் ஒரு அதிர்ஷ்டசாலி என்று நான் நினைக்கவில்லை. எனவே இந்த பயணத்தில் நான் ஒரு நம்ப முடியாத அதிர்ஷ்டசாலி என கருதுகிறேன்.  உங்களுக்குள் ஒரு குழந்தை வளர்வதை உணருவது இனிமையானது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. பெரும்பாலான நாட்களில் எனது பம்ப் வளர்வதை நான் பார்த்து கொண்டிருக்கிறேன். விரைவில் உன்னை சந்திக்க காத்திருக்கிறேன். சில நாட்கள் விவரிக்க முடியாத அளவு கடினமாகவும் இருக்கும்.. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார் பின் தொடர்ந்து  என்னை நம்பிக்கை அற்றதாக அந்த நாட்கள் உணர்த்துகிறது. நான் நன்றி உள்ளவளாக இருக்க வேண்டும். அற்பமான விஷயத்திற்கு அழக்கூடாது. நான் வலுவாக இருக்க வேண்டும். எனக்கு வலிமை இல்லை என்றால், நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன். நான் எப்படி இருப்பேன் என்பதெல்லாம் தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் நான் இந்த குழந்தையை அதிகம் நேசிக்கிறேன். என்று உணர்வு பூர்வமாக தெரிவித்துள்ளார் நடிகை இலியானா. இதையடுத்து அவரது பதிவு ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

கோலாகல கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த விழா.. குவியும் வாழ்த்துகள் – வைரலாகும் அழகிய புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

கோலாகல கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த விழா.. குவியும் வாழ்த்துகள் – வைரலாகும் அழகிய புகைப்படங்கள் உள்ளே..

இரவோடு இரவாக பிரபல நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி.. என்ன நேர்ந்தது? – விவரம் உள்ளே..
சினிமா

இரவோடு இரவாக பிரபல நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி.. என்ன நேர்ந்தது? – விவரம் உள்ளே..

ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’-ல் இணையும் அமிதாப் பச்சன்.. 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி..! - விவரம் உள்ளே..
சினிமா

ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’-ல் இணையும் அமிதாப் பச்சன்.. 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி..! - விவரம் உள்ளே..