இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் முக்கியமான நடிகர்களில் ஒருவரான நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சித்தார்த்.

அடுத்ததாக இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள மஹா சமுத்திரம் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் சர்வானந்த் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைடாரி மற்றும் அனு இமானுவேல் நடித்துள்ளனர்.

மேலும் ஜெகபதி பாபு மற்றும் கேஜிஎஃப் புகழ் கருடா ராம் ஆகியோர் வில்லன்களாக மிரட்டியுள்ளனர். A.K. என்டர்டெயின்மென்ட் சார்பில் அணில் சங்கரா தயாரித்துள்ள மஹா சமுத்திரம் படத்திற்கு சைட்டன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக மஹா சமுத்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னதாக வெளியான மஹா சமுத்திரம் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மஹா சமுத்திரம் திரைப்படத்திலிருந்து புதிய ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. அழகான அந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.