"இந்தியாவின் முதல் தலைசிறந்த ALL TIME PAN INDIA STAR கமல் சார் தான்!"- வைரலாகும் சித்தார்த்தின் அட்டகாசமான வீடியோ இதோ!

கமல்ஹாசன் தான் பேன் இந்தியா ஸ்டார் என பேசிய சித்தார்த்,siddharth says kamal haasan is the only pan india star | Galatta

இந்திய சினிமாவின் தலைசிறந்த ஆல் டைம் லெஜன்ட் பேன் இந்தியா ஸ்டார் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் என்று நடிகர் சித்தார்த் பேசியிருக்கிறார். முன்னதாக நடிகர் சித்தார்த் நடிப்பில் பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகி இருக்கும் டக்கர் திரைப்படம் வரும் ஜூன் 9ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் S.U.அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் சித்தா திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் சித்தார்த் அடுத்ததாக முன்னணி தயாரிப்பாளர் சசிகாந்த் அவர்கள் முதன்முறை இயக்குனராக களமிறங்கும் தி டெஸ்ட் திரைப்படத்தில் நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்த பிரம்மிப்பான படைப்பாக தயாராகி வரும் உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. நாளுக்கு நாள் இந்தியன் 2 திரைப்படம் குறித்து வெளிவரும் ஒவ்வொரு தகவல்களும் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடிகர் சித்தார்த்தின் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் தனது மானசீக குருவான உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தான் உண்மையான பேன் இந்தியா ஸ்டார் என்பது குறித்து மிக விளக்கமாக பேசினார். அப்படி பேசுகையில்,

“இந்தியாவின் முதல் தலைசிறந்த எப்போதுமான லெஜன்ட் பேன் இந்தியா ஸ்டார் என்றால் அது இவர் தான். ஏனென்றால் பேன் இந்தியா என்பதற்கு  ஒரு அர்த்தம் இருக்கிறது. எங்கு போனாலும் நான் அந்த ஊர் காரன் என நிரூபித்து நடிக்கத் தெரிந்தவன் தான் பேன் இந்தியா ஸ்டார். எங்கேயோ ஒருத்தன் பிரபலமாக இருக்கிறான் அவன் படத்தை இங்கே பாருங்கள் என்றால் அவன் பேன் இந்தியா ஸ்டார் கிடையாது. இவர் தான் பேன் இந்தியா ஸ்டார். நீங்கள் ஒரு முறை பஞ்சதந்திரம் படம் பாருங்கள்... அதில் ஒரே காட்சியில் நான்கு மொழிகளில் பேசி ஒன்று செய்திருப்பார். அதை நான் எழுதி தருகிறேன்.. அந்தக் காட்சியை முயற்சி செய்வதற்கே ஒரு ஒன்று இரண்டு பேர் தான் இருப்பார்கள். ஒரு நான்கு மொழிகளை புரிந்து இந்த ஊர்க்காரன் போல் பேசத் தெரிந்து, எமோஷனலோடு ஒரே டேக்கில் செய்ய முடிந்த ஒரு உலகநாயகன் என்றால் எங்கள் கமல் ஹாசன் அவர்கள் தான்”

என சித்தார்த் பேசியிருக்கிறார்.உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் குறித்தும் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் இந்த சித்தார்த் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் நடிகர் சித்தார்த் பகிர்ந்து கொண்டார். அந்த சித்தார்த் ரசிகர்கள் கொண்டாட்டம் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் திருமணம் குறித்து கேள்வி.. - மாஸ் ரிப்ளே கொடுத்த கீர்த்தி சுரேஷ் ..! – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் திருமணம் குறித்து கேள்வி.. - மாஸ் ரிப்ளே கொடுத்த கீர்த்தி சுரேஷ் ..! – வைரல் வீடியோ உள்ளே..

“மாமன்னன் என் கடைசி திரைப்படம்..?”  இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின் – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

“மாமன்னன் என் கடைசி திரைப்படம்..?” இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின் – வைரல் வீடியோ உள்ளே..

வீரன் முதல் மாமன்னன் வரை.. ஜூன் மாதம் திரையரங்குகளில் படையெடுக்கும் முக்கியமான  திரைப்படங்கள்.. – சிறப்பு பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

வீரன் முதல் மாமன்னன் வரை.. ஜூன் மாதம் திரையரங்குகளில் படையெடுக்கும் முக்கியமான திரைப்படங்கள்.. – சிறப்பு பட்டியல் இதோ..