லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனருடன் கைகோர்த்த சதீஷ்... வித்தைக்காரன் பட அசத்தலான லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

சதீஷின் வித்தைக்காரன் பட டப்பிங் ஆரம்பம்,sathish in vithaikkaaran movie dubbing works started | Galatta

நட்சத்திர இயக்குனராக உயர்ந்து தற்போது தளபதி விஜயின் 67வது திரைப்படமாக தயாராகிய வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் அசோசியேட் இயக்குனரான வெங்கி இயக்கத்தில் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் வித்தைக்காரன் திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தளபதி விஜய், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்குமுள்ள திரையரங்குகளில் ரிலீஸாக தயாராகி வருகிறது.

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறை தளபதி விஜயுடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்திலும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் திரைப்படத்திலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர் தான் இயக்குனர் வெங்கி. இவர் தற்போது முதல் முறை இயக்குனராக களமிறங்கும் திரைப்படம் தான் நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் வித்தைக்காரன். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தற்போது கதையின் நாயகனாகவும் குறிப்பிடப்படும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் சதீஷ் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த நாய் சேகர் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த வரிசையில் அடுத்ததாக தனது நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் சட்டம் என் கையில் எனும் திரைப்படத்தில் தற்போது சதீஷ் நடித்து வருகிறார். 

இதனிடையே நடிகர் சதீஷின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக தயாராகி வருகிறது வித்தைக்காரன் திரைப்படம். வொய்ட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 3வது படைப்பாக பிளாக் காமெடி திரைப்படமாக தயாராகும் வித்தைக்காரன் படத்தில் சதீஷ் உடன் இணைந்து அறிமுக நடிகை சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், ரமேஷ் திலக், ஜான் விஜய், தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவா கார்த்திக் ஒளிப்பதிவில் அருள் E சித்தார்த் படத்தொகுப்பு செய்யும் இந்த புதிய படத்திற்கு VBR இசையமைக்கிறார். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இந்த வித்தைக்காரன் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் வித்தைக்காரன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தொடங்கி இருப்பதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக வித்தைக்காரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் டப்பிங் பணிகளை தொடங்குவதற்கு முன்பாக டப்பிங் பணிகளுக்காக நடைபெற்ற பூஜையின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ…
 

#Vithaikkaaran Dubbing started Today With Pooja ❤️😍
God & Cinema Fans Bless Us 🙏🏻🤗🙏🏻@Venki_dir #SimranGupta@WCF2021 @vijaywcf @Vairamuthu @vbrcomposer @iamyuvakarthick @editorsiddharth@Gdurairaj10 @Muralikris1001 @R_chandru @Dharani_1708@thinkmusicindia @teamaimprpic.twitter.com/v8twYSy3uC

— Sathish (@actorsathish) June 5, 2023

கார் விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் காலமானார்... அதிர்ச்சியில் ரசிகர்கள்! விவரம் உள்ளே
சினிமா

கார் விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் காலமானார்... அதிர்ச்சியில் ரசிகர்கள்! விவரம் உள்ளே

ரோலக்ஸ் கேரக்டராக மாறும் சூர்யா... சோசியல் மீடியாவை அதிரவிட்ட விக்ரம் பட UNSEEN ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

ரோலக்ஸ் கேரக்டராக மாறும் சூர்யா... சோசியல் மீடியாவை அதிரவிட்ட விக்ரம் பட UNSEEN ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!

கோலாகலமாக நடைபெற்ற எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந்த் - ரக்ஷிதா திருமணம்... ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

கோலாகலமாக நடைபெற்ற எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந்த் - ரக்ஷிதா திருமணம்... ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!