"இந்த பயணத்தில் மிகவும் மகிழ்ச்சி..!"- வீரமே ஜெயம் என மாவீரன் பட மாஸ் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்... ட்ரெண்டாகும் புது GLIMPSE இதோ!

மாவீரன் பட டப்பிங் நிறைவு செய்த சிவகார்த்திகேயன்,sivakarthikeyan completed his dubbing for maaveeran | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் அதிரடியான புதிய அறிவிப்பு வெளியானது. சின்னத்திரையின் வழியே தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து படிப்படியாக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, SK21 திரைப்படம் பூஜை உடன் தொடங்கப்பட்டது.

முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் VFX பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக அயலான் படம் குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து முதல் முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த, மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் தான் மாவீரன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் மாவீரன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் இப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். 

மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் ஜூலை 14ம் தேதி தமிழில் மாவீரன் தெலுங்கில் மஹாவீருடு என இரு மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தற்போது மாவீரன் திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணிகளை தொடங்கினார். இந்நிலையில் தற்போது மாவீரன் திரைப்படத்தின் தன் பகுதி டப்பிங்கை சிவகார்த்திகேயன் நிறைவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் யன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மாவீரன் படத்திற்கான என் டப்பிங்கை முடித்து விட்டேன். இந்த பயணத்தில் மிகவும் மகிழ்ச்சி... இயக்குனர் மடோன் அஸ்வின் மற்றும் அவரது அணியினர் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு காட்ட ஆர்வத்தோடு இருக்கிறேன்" என குறிப்பிட்டு டப்பிங்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் செம்ம ட்ரீட்... வேதாளம் ரீமேக் பட அட்டகாசமான போலா மேனியா பாடல் இதோ!
சினிமா

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் செம்ம ட்ரீட்... வேதாளம் ரீமேக் பட அட்டகாசமான போலா மேனியா பாடல் இதோ!

கார் விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் காலமானார்... அதிர்ச்சியில் ரசிகர்கள்! விவரம் உள்ளே
சினிமா

கார் விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் காலமானார்... அதிர்ச்சியில் ரசிகர்கள்! விவரம் உள்ளே

ரோலக்ஸ் கேரக்டராக மாறும் சூர்யா... சோசியல் மீடியாவை அதிரவிட்ட விக்ரம் பட UNSEEN ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

ரோலக்ஸ் கேரக்டராக மாறும் சூர்யா... சோசியல் மீடியாவை அதிரவிட்ட விக்ரம் பட UNSEEN ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!