தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சித்தார்த் நடித்துள்ள டக்கர் திரைப்படம் வருகிற ஜூன் 9ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியன் 2, சித்தா மற்றும் டெஸ்ட் என சித்தார்த் நடிக்கும் திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசையாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடிகர் சித்தார்த் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் நம்மோடு அவரது திரைப்பயணத்தின் சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக நடிகை ஜெனிலியா சித்தார்த் குறித்து பேசும் ஒரு காணொளி ஒளிபரப்பானது.
அதில் பேசிய ஜெனிலியா, “நான் தென்னிந்திய திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்த சமயத்தில் சித்தார்த் ஒரு அற்புதமான நண்பர்… கிட்டத்தட்ட அவர் எனக்கு ஒரு ஆசிரியர் போல... அவர் எனக்கு தமிழ் கற்றுக் கொடுப்பார். தெலுங்கு கற்றுக் கொடுப்பார்... எங்களுக்கென ஸ்பெஷலான திரைப்படங்கள் நாங்கள் இணைந்து நடித்திருந்தோம். அவருக்கு எப்போதும் எனது இதயத்திலும் ஸ்பெஷலான ஒரு இடம் இருக்கிறது. உங்களுக்கு எல்லாம் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்” என பேசி இருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகை ஜெனிலியா குறித்து பேசத் தொடங்கிய நடிகர் சித்தார்த், “என் குழந்தைங்க அது... நான் அவளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறேன், தெலுங்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன், எக்கனாமிக்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறேன், அக்கவுண்ட்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறேன், காமர்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஏனென்றால் இவர் தினமும் அழுது கொண்டே இருப்பார் செட்டில்... ஏனென்றால் இரண்டு மூன்று பக்கத்திற்கு வசனங்கள் கொடுத்து விடுவார் ஷங்கர் சார்... ஐயோ எனக்கு தமிழ் தெரியவில்லை என சொல்லிக்கொண்டு அழுது கொண்டே இருப்பார். ஒருமுறை ஷங்கர் சார் வந்து, “அந்தப் பொண்ணு ரொம்ப டென்ஷன் ஆகுது நீ கொஞ்சம் சொல்லிக் கொடுக்கிறியா?” என கேட்டார். அந்த கிளைமாக்ஸ்… கோர்ட் ஷூட்டிங்கிற்கு முன்பு... தினமும் மாலையில் T-நகரில் இருக்கும் ஷங்கர் சாரின் அலுவலகத்தில் உட்கார வைத்து இவருக்கு டயலாக் டியூஷன். அவர் ரொம்ப பயபக்தியோடு அதை படிப்பார். பின்னர் அந்த டேட்டிங் பாடல் எடுக்கும் போது ஜெனிலியாவிற்கு அடுத்த நாள் பாம்பேவிற்கு சென்று பரீட்சை எழுத வேண்டும். டேட்டிங் பாடல் பிரார்த்தனாவில் கடைசியில் படமாக்கப்பட்டது. பின்பக்க ஸ்கிரீனில் முதல்வன் படத்தில் சகலக்க பேபி பாடல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் முன்னாள் நின்று நாங்கள் நடனமாடி கொண்டிருப்போம். கட் செய்தால் உடனே நான் காரில் அமர்ந்து கொண்டு அவருக்கு எக்னாமிக்ஸ் டியூஷன் எடுப்பேன். ஏனென்றால் அவருக்கு அடுத்த நாள் எக்னாமிக்ஸ் பரீட்சை... ஜெனிலியாவிற்கு ஃபர்ஸ்ட் ஹீரோ நான் எனக்கு ஃபர்ஸ்ட் ஹீரோயின் அவர்… நாங்கள் இருவரும் பாஷை மாறி இன்னொரு படம் நடித்தோம். அது அந்தத் திரை உலகில் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்... பொம்மரிலு என்ற திரைப்படம்... பாய்ஸ் மற்றும் பொம்மரிலு இரண்டும் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள்… நாங்கள் மறந்தாலும் நாங்கள் போனாலும் யாராலும் மறக்க முடியாத அளவிற்கு 2 வெற்றி படங்கள்... எனக்கு நீங்கள் ஃபர்ஸ்ட் ஹீரோயினாக ஜெனிலியா இல்லாமல் வேறு யாராக இருப்பார்கள் என்று கேட்டால் இந்த ஜென்மத்தில் யாரும் இருக்கக் கூடாது எப்பவுமே ஜெனி தான் என்னுடைய ஃபர்ஸ்ட் ஹீரோயின்” என பேசி இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சித்தார்த்தின் அந்த ஸ்பெஷல் பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.