தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் முன்னணியில் இருந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின் தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அட்டகாசமான காமெடி கதைக்களத்தில் பல படங்களை நடித்து பிரபலமானார். பின்னர் திரைப்படங்களை சரியான முறையில் தேர்ந்தெடுத்து நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். அதன்படி மனிதன், கலக தலைவன். சைக்கோ, நிமிர், நெஞ்சுக்கு நீதி, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளாராக நின்ற உதயநிதி ஸ்டாலின் மக்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கபட்டார். அதன்பின் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மக்கள் பனியின் காரணமாக கை வசம் இருந்த திரைப்படங்களை தவிர்த்து வந்தார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வந்த ‘மாமன்னன்’ திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாக இருக்கும் என்ற பேச்சும் வைரலாக பரவியது.
இது குறித்து நேற்று சென்னையில் நடைபெற்ற மாமன்னன் பட இசை வெளியீட்டு விழா பத்திரிக்கையாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பகிர்ந்து கொண்டார். அதில், “மக்கள் பணி நிறைய இருக்கு.. கமல் சாருடைய தயாரிப்பில் ஒரு படம் நடிக்க வேண்டியதா இருந்தது. தலைவர் அமைச்சர் பொறுப்பு கொடுத்ததற்கு பின் படங்களில் நடித்தால் சரியாக வராது. நிறைய பணி இருக்கு. நிறைய எதிர்ப்புகள் இருக்கு.. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவே சிரமப்பட்டுதான் பன்றேன்.
எனக்கு தெரிஞ்சு இதுதான் கடைசி படமா இருக்கும்.. அதுல நல்லா படமா பண்ணது சந்தோஷம்.. எனக்கும் மாரி செல்வராஜூக்கும் நிறைய புரிதல். அவருக்கும் எனக்கும் நல்லா செட் ஆச்சு.. நிறைய பேசுவோம்.. ஒரு காட்சிக்கும் ஒரு வசனத்திற்கும் ஒரு அர்த்தம்..மாரி செல்வராஜ் என்னிடம் சொல்லிருக்கார். நீங்க அடுத்து படம் பண்ணா நான் இயக்குற படமா அது இருக்கனும் னு சொல்லியிருக்கார். ஆனால் அடுத்த மூன்று வருஷத்துக்கு கண்டிப்பா முடியாது. அதுக்கப்புறம் மக்கள்தான் முடிவு செய்யனும். நானும் அவரிடம் சொல்லியிருக்கேன் அடுத்து படம் பண்ணா உங்க இயக்கத்துல தான் பண்ணுவேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கேன்..” என்றார் உதயநிதி ஸ்டாலின் தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகவுள்ள மாமன்னன் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது இவரது இசையில் வெளியான பாடல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.