இந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் சித்தார்த் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் டக்கர். பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக சித்தார்த் நடித்திருக்கும் டக்கர் திரைப்படம் வருகிற ஜூன் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனை அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நடிகர் சித்தார்த் நடிப்பில் அடுத்தடுத்து டெஸ்ட் மற்றும் சித்தா ஆகிய படங்களும் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சித்தார்த் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் தனது மானசீக குருவான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் குறித்து மனம் திறந்து பேசினார். முன்னதாக சித்தார்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பேசிய ஒரு சிறிய காணொளி ஒளிபரப்பானது. அதை பார்த்ததும் எமோஷனலாகி கண்கலங்கிய நடிகர் சித்தார்த் தொடர்ந்து பேசியபோது,
“கமல் சாரை எப்போது பார்த்தாலும் எனக்கு இப்படித்தான் ரியாக்ஷன் வரும். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். நான் கமல் ரசிகன் என்பதெல்லாம் தாண்டி வெறியன் என்று தான் சொல்ல வேண்டும். இந்த வீடியோ வந்து என்னுடைய பிறந்தநாள் சமயத்தில், அவர் ஊரில் இல்லை... சித்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டோம். அந்த படம் எடுத்து முடித்த பிறகு கமல் சாரிடம் பேசினேன். “சார் நான் இதுவரை உங்களிடம் என்னுடைய எந்த படத்தையும் எடுத்துக் கொண்டு வந்ததே இல்லை. முதல் முறையாக என் குருவுக்கு காட்டும் அளவிற்கு நான் ஒரு படம் எடுத்திருக்கிறேன். நாங்களே தயாரித்து, நான் நடித்து உங்களுக்கு காட்டும் அளவிற்கு ஒரு தைரியம் இந்த படத்தை எடுத்த பிறகு வந்திருக்கிறது”. அப்போது அவர் தென் ஆப்பிரிக்காவில் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பில் இருந்தார். நான் கேட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக... கமல் சார் குறித்து நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். காலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக கொஞ்சம் சீக்கிரம் எழுந்து... மூன்று கேமராக்கள் அவரே செட் செய்து, லொகேஷன் அவரே இங்கே எடுக்கலாம் என முடிவு செய்து... இந்த மூன்று கேமராக்களுக்கு அவர் ஆக்சன் கட் சொல்லி... அவர் கொடுத்தது இந்த மெசேஜ்... நான் இதை வெட்கத்தை விட்டு விட்டு சொல்கிறேன். இதை தினமும் குறைந்தது ஒரு முறை நான் பார்ப்பேன். ஏனென்றால் எனக்கு பிடித்த படம் இது… சார் என்னைப் பற்றி அவ்வளவு அன்பாக பேசியது... இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அதே வீடியோவை முழுவதுமாக ஆங்கிலத்தில் ஒருமுறை தமிழில் ஒரு முறை என இரண்டு மொழிகளில் எடுத்து கொடுத்தார்.”
என பேசியிருக்கிறார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட சித்தார்த்தின் எமோஷனலான அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.