தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியில் லக் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.7ஆம் அறிவு,3,புலி,வேதாளம் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் நாயகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான லாபம் படத்தில் கடைசியாக தமிழில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தவிர இவர் நடித்த Best seller என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியானது.

பிரபாஸ் நடிக்கும் சலார்,பாலகிருஷ்ணா நடிக்கும் NBK 107 உள்ளிட்ட படங்களில் அடுத்து ஹீரோயினாக நடித்து வருகிறார்.ஸ்ருதிஹாசன் டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார் என்பது பலரும் அறிந்ததே.இவரது பிறந்தநாள் நேற்று முடிந்தது.

இவரது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன் தனது காதலரை முத்தமிடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.