சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, காஞ்சனா 4 படங்கள் குறித்து பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்! விவரம் உள்ளே

சந்திரமுகி 2 ஜிகர்தண்டா 2 காஞ்சனா 4 படங்களின் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்,Raghava lawrence about chandramukhi 2 jigarthanda 2 kanchana 4 | Galatta

நடன கலைஞர் , நடன இயக்குனர் , இயக்குனர் முன்னணி ஹீரோ  என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்சன் என்டர்டைனிங் திரைப்படமாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக ரிலீஸாகியுள்ள திரைப்படம் ருத்ரன். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்கள் முதல் முறை இயக்குனராக களமிறங்கும் ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். FIVE STAR CREATIONS LLP நிறுவனத்தின் தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்களின் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகியுள்ள ருத்ரன் திரைப்படத்திற்கு  RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில்  ரிலீஸான ருத்ரன் திரைப்படம் ரசிகர்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் SJ.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பிலும் திரைக்கதையிலும், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது ருத்ரன் திரைப்படத்தின் PROMOTION பணிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகவா லாரன்ஸ் அவர்கள் மதுரையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தனது பேவரட்டான காஞ்சனா சீரிஸ் படங்களில் அடுத்து தயாராக இருக்கும் காஞ்சனா 4 திரைப்படத்தின் கதையை எழுதி வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் மூன்று பாடல்களும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருப்பதாகவும் இந்த 2023ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெளியிடாக சந்திரமுகி 2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். தனது நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரா இருக்கும் சந்திரமுகி 2 ஜிகர்தண்டா 2 மற்றும் காஞ்சனா 4 ஆகிய திரைப்படங்கள் குறித்து ராகவா லாரன்ஸ் கொடுத்துள்ள இந்த மாஸ் அப்டேட்டால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
 

சினிமா

"லோகேஷ் ப்ரோ & உங்கள் தளபதி..!"- பொன்னியின் செல்வன் 2 மேடையில் லியோ அப்டேட் கொடுத்த த்ரிஷா... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

சீயான் விக்ரமின் மிரட்டலான பிறந்தநாள் பரிசு... அதிரடியான தங்கலான் படத்தின் மிரள வைக்கும் புது GLIMPSE இதோ!
சினிமா

சீயான் விக்ரமின் மிரட்டலான பிறந்தநாள் பரிசு... அதிரடியான தங்கலான் படத்தின் மிரள வைக்கும் புது GLIMPSE இதோ!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய அட்டகாசமான தகவல்! வீடியோ உள்ளே
சினிமா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய அட்டகாசமான தகவல்! வீடியோ உள்ளே