"21 படத்தின் அட்வான்ஸை திரும்ப கொடுத்தேன்!" கவர்ச்சிப் படங்களில் நடிப்பதை நிறுத்தியது ஏன்? மனம் திறந்த ஷகீலாவின் வைரல் வீடியோ இதோ!

கவர்ச்சி படங்களில் நடிப்பதை நிறுத்தியது ஏன் என மனம் திறந்த ஷகீலா,shakeela opens about why she stopped soft porn movies | Galatta

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக 1990களின் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷகீலா. குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளமாகிய மொழிகளில் இவர் நடித்த கவர்ச்சி திரைப்படங்களும், இவர் நடித்த கவர்ச்சியான கதாபாத்திரங்களும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய புகழை கொடுத்தது. இருப்பினும் வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டுமே மக்கள் மனதில் இருந்த நடிகை ஷகீலா கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து கவர்ச்சி திரைப்படங்களிலிருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார். அதேபோல் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடிப்பதையும் தொடர்ந்து நிறுத்தி விட்டார். முன்னதாக விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஷகீலா தற்போது கவர்ச்சி நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து மாறி முற்றிலும் வேறு ஒரு கண்ணோட்டத்தில் மக்களால் கொண்டாடப்படுகிறார். இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிறகு பேசிய நடிகை ஷகிலா தனது பயணத்தில் நடந்த பல உண்மைகளை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், உங்களது வாழ்க்கையில் நிறைய பரிமாணங்கள் இருக்கிறது அல்லவா? அதில் முக்கியமான ஒன்று இந்த கவர்ச்சி துறைக்கு நீங்கள் வந்தது.. திடீரென 2012ல் SOFT PORN(கவர்ச்சிப் படங்கள்) பண்ண மாட்டேன் நிறத்துகிறேன் என அறிக்கை கொடுத்தீர்கள். எதனால் அந்த சமயத்தில் இதனை அறிவித்தீர்கள். எனக் கேட்டபோது,

"அது 2001 ஆம் ஆண்டு. இதை நான் பலமுறை தெரிவித்து இருக்கிறேன். அதாவது எனக்கு இங்கே சொல்லும் கதை ஒன்று.. படம் கேரளாவில் ரிலீஸாவதால் அதில் பிட் போட்டு ஒட்டுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. கூடுதலாக பாடி டபுள் எல்லாம் செய்து, சென்சார் முடித்த பிறகு சென்சாரில் இல்லாததை பிட் போட்டு ஒட்டி ரிலீஸ் செய்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்ட போது என்னை மிகவும் மோசம் செய்து விட்டார்கள் என்று எனக்கு உணர்ந்து. என்ன இவ்வளவு ஏமாற்றி விட்டார்கள் என்று.. அதுமட்டுமல்லாமல் 23 திரைப்படங்களுக்கு சென்சார் கொடுக்காமல் வைத்திருந்தார்கள் அதனால் என்ன பிரச்சனை என்றால், ஒவ்வொருவரும் அவர்களது வீட்டை அடமானம் வைத்து பணம் கொண்டு வந்து படம் எடுத்தவர்கள் தான். அவர்கள் யாரும் கோடீஸ்வரர்கள் கிடையாது. ஒரு 15 லட்சம் ரூபாய் தான் என் படத்தின் பட்ஜெட். அதில் அவர்களுக்கு அதிகபட்சமாக 19 - 21 லட்ச ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அந்த 14 - 15 லட்ச ரூபாய் அதில் கிடைத்துவிடும். அவர்களுக்கு கிடைக்கப் போவது என்னமோ ஐந்து - ஆறு லட்ச ரூபாய்தான். இதற்காகத்தான் அவர்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு படம் பண்ணுகிறார்கள். அதற்கு இவர்கள் சென்சார் கொடுக்காமல் வைத்திருந்தது எனக்கு ஒரு விதமான கோபம் வந்தது. ஒரு படத்திற்கான அட்வான்ஸ் நான் வாங்கி வைத்திருக்கிறேன் இவர்கள் இப்படி செய்வதை பார்த்து எனக்கு கோபம் வந்து நான் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை வைத்து எனது வீட்டு மொட்டை மாடியில் அனைவரையும் அழைத்து இனிமேல் நான் இந்த SOFT PORN படங்கள் பண்ண மாட்டேன் நான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுக்கிறேன் என திரும்ப கொடுத்துவிட்டேன்." என தெரிவித்துள்ளார். நடிகை ஷகீலாவின் அந்த முழு பேட்டி இதோ…
 

ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி தரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலின் நடிகை! யார் தெரியுமா? விவரம் உள்ளே
சினிமா

ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி தரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலின் நடிகை! யார் தெரியுமா? விவரம் உள்ளே

“நான் இங்கே நிற்க காரணம் நான் ஈன்றெடுத்த மகன்!”- சிலம்பரசன்TRன் பத்து தல பட இசை வெளியீட்டை அதிர வைத்த Tராஜேந்தர்! வீடியோ உள்ளே
சினிமா

“நான் இங்கே நிற்க காரணம் நான் ஈன்றெடுத்த மகன்!”- சிலம்பரசன்TRன் பத்து தல பட இசை வெளியீட்டை அதிர வைத்த Tராஜேந்தர்! வீடியோ உள்ளே

'வேற மாறி வந்திருக்கேன்.. என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க!'- பத்து தல இசை வெளியீட்டில் மாஸாக பேசிய சிலம்பரசன்TRன்! முழு வீடியோ இதோ
சினிமா

'வேற மாறி வந்திருக்கேன்.. என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க!'- பத்து தல இசை வெளியீட்டில் மாஸாக பேசிய சிலம்பரசன்TRன்! முழு வீடியோ இதோ