“நான் இங்கே நிற்க காரணம் நான் ஈன்றெடுத்த மகன்!”- சிலம்பரசன்TRன் பத்து தல பட இசை வெளியீட்டை அதிர வைத்த Tராஜேந்தர்! வீடியோ உள்ளே

சிலம்பரசன்TRன் பத்து தல பட இசை வெளியீட்டை அதிர வைத்த Tராஜேந்தர்,t rajendar speech at silambarasan tr pathu thala movie audio launch | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகியுள்ள திரைப்படம் பத்து தல. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக தமிழில் தயாராகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்த வேடத்தின் தமிழ் வெர்ஷனாக AG.ராவணன் எனும் AGR கதாபாத்திரத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ளார். சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் KE.ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல திரைப்படம் பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மார்ச் 18ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் அவர்களின் தந்தையும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய திரை ஜாம்பவானுமான T.ராஜேந்திர் அவர்கள் கலந்து கொண்டார். முதல்முறையாக சிலம்பரசன்.TR அவர்களின் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட T.ராஜேந்தர் அவர்கள் விழா மேடையில் பேசிய போது ஆரம்பத்திலேயே தனக்கே உரித்தான பாணியில் மைக்கில் தட்டி தட்டி சில வினாடிகள் அப்படியே தாளம் போட்டு பின்னர் “மைக் டெஸ்ட்” என சொன்னதும் அரங்கமே சிரிப்பொலியில் கலகலப்பானது. தொடர்ந்து பேசியபோது, முதலில் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்த T.ராஜேந்தர் அவர்கள், “நான் இந்த விழாவிற்கு விரும்பி வரவில்லை, நான் அமெரிக்கா சென்று என்னுடைய உடல்நிலை காரணமாக நான் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததற்கு பின்னால், எந்த கூட்டம் இருக்கக்கூடிய இடத்திற்கும் நான் செல்வதில்லை. இங்கேயோ திரளாக கூட்டம். ஆனால் நான் இங்கு வரவேண்டும் என்று என் மகனுக்கு என் மீது நாட்டம். நான் வர மறுத்தால் என் மகனுக்கு வந்து விடுமோ வாட்டம், என லேசாக பார்க்க நினைத்தேன் ஒரு சின்ன நீரோட்டம் ஒரு மேலோட்டம். நான் வரவேண்டும் என்று STR ரசிகர்களுக்கோ போராட்டம்... என தனது ஸ்டைலான அடுக்கு மொழியில் பேசினார். அப்போது, “இப்படியே நான் விட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவேன். விடியும் வரை கூட பேசுவேன். ஆனால் என் மனைவி உஷா ராஜேந்தர் விழாவிற்கு வந்திருக்கிறார். “நீங்க பேசாம தான் வரணும்”... ஏனென்றால் என் இதயம் அவள் என் உயிர் உள்ளவரை உஷா என நான் கரம் பிடித்த என் மனைவி. என் இதயம் உயிருள்ளவரை உஷாவிலே என் வாழ்க்கையிலே வந்தது ஒரு உதயம். அதற்கு காரணமான என் உயிர் உள்ளவரை என் இதயம். அவளால் வந்தது தான் என் வாழ்க்கையிலே சதயம். இந்த இதயம்.. உதயம்.. சதயம் என்னவென்று யாருக்கு தெரியவில்லை, என்றாலும் நான் கண்டெடுத்த உதயமான என் உதயம் சிலம்பரசனுக்கு தெரியும். நான் வர மறுத்தேன். வெந்து தணிந்தது காடு படத்தின் விழாவிற்கு என் நண்பர் ஐசரி கணேஷ் அவர்கள் அழைத்தார். “நான் அப்போது தான் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தேன் என்னால் வர இயலாது நண்பா” என சொல்லி இருந்தேன். ஆனால் இந்த விழாவில் என் நண்பர்(KE.ஞானவேல்ராஜா) என்னை விடவில்லை. என்னுடைய இனிய நண்பர் யார் என்று கேட்டால் தனஞ்செயன்! தனம் என் கையைப் பிடித்து வருவது போல தனஞ்செயன் என்னை மேடைக்கு அழைத்து வந்தார். இவை எல்லாவற்றுக்கும் மேலே இந்த விழாவிற்கு நான் வந்ததற்கு காரணம் இசை வெளியீட்டு விழாவிலே இந்த தமிழ்நாட்டில் பிறந்து ஆஸ்கார் வரை சென்று தமிழ் மண்ணின் பெருமையை, இந்த இந்திய நாட்டின் பெருமையை, மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு மதத்தை பார்க்காமல் நான் மதங்களை பார்ப்பவன் அல்ல… நான் மனங்களை பார்ப்பவன்! நான் இனங்களை பார்ப்பவன் அல்ல இதயங்களை பார்ப்பவன்! நான் நிறங்களை பார்ப்பவன் அல்ல.. நெஞ்சங்களை பார்ப்பவன்! அப்படிப்பட்ட நான் அந்த ஆஸ்கர் வரை சென்று விட்டு வந்த இந்த ஆருயிர் தோழனை பாராட்ட. அவருக்கு ஒரு நினைவு பரிசை கொடுக்க வேண்டும் என சொன்னார்கள். எதைக் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியாது. என் நினைவையே கொடுப்போமா? அவர் வாழ்க்கையில் கொண்ட கனவை கொடுப்போமா? இல்லை என் மகனோடு அவர் கொண்ட உறவை கொடுப்போமா? வந்தேன் ஒரு வீணையை கொடுத்தார்கள். அந்த வீணையை பார்த்தேன் வெள்ளி… என் இதயத்தை தர நினைத்தேன் அள்ளி… அழைத்தவுடன் வந்தேன் துள்ளி… இந்த வீணையிலே பார்த்தேன் வெள்ளி… அதுவோ வீணை கொட்டுமே அது தேனை… உனக்கு என் கையால் தந்தேன் அந்த வீணை… என் மனைவி சொன்னார் அதிகம் பேச வேண்டாம். முகத்தை மட்டும் காட்டுங்கள் அவருக்கு நினைவு பரிசை கொடுத்து விட்டு கீழே வந்து விடுங்கள் என்று சொன்னார். மனைவி சொல்லே மந்திரம் ஆனால் அதையும் மீறி இப்போது பேசுகிறேன் இது என் தந்திரம். எல்லாம் பேச வேண்டும் என என் மகன் சொல்லித் தந்தது தாரக மந்திரம். ஒன்று மேடையில் ஏறக்கூடாது இல்லை ஏறிவிட்டால் எனது ரசிகர்களை திருப்தி படுத்தாமல் நீங்கள் இறங்க கூடாது. என் தந்தைக்கு இருப்பது கம்பீரம் என் தந்தையின் கம்பீரம் அதை வைத்து தான் என் வீரம் என் மகன் கூட்டிய உரம் அதனால்தான் அமெரிக்கா போய் நான் வந்து இங்கே நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மகன். நான் ஈன்றெடுத்த என் மகன். அவனுக்காக வராமல் வேற யாருக்காக நான் வருவேன். நான் இங்கே வந்திருந்த போது பாடிக்கொண்டிருந்தார்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் இந்த மைக்கில் எக்கோ ஆகிக் கொண்டிருந்தது இந்த மைக்கில் நான் பேச மாட்டேன் என சொல்லி இருந்தேன் இப்போது இந்த மைக்கை நான் பேச வைத்து விட்டேன். எனக்கு மைக்கை பிடிக்குமா இல்லை மயக்குக்கு எண்ணெய் பிடிக்குமா என்று எனக்கு தெரியாது.”  எனக் குறிப்பிட்டு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தாங்கள் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது அட்டகாசமான பேச்சாளர் ஒட்டுமொத்த அரங்கையும் மகிழ்வித்து T.ராஜேந்தர் அவர்களின் அந்த முழு வீடியோ இதோ…
 

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் அசத்தலான ஹாரர் காமெடி சரவெடி… கோஸ்டி படத்தின் கலகலப்பான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் அசத்தலான ஹாரர் காமெடி சரவெடி… கோஸ்டி படத்தின் கலகலப்பான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

அடுத்த கட்டத்திற்கு நகரும் தளபதி விஜயின் லியோ பட விறுவிறுப்பான ஷூட்டிங்... அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

அடுத்த கட்டத்திற்கு நகரும் தளபதி விஜயின் லியோ பட விறுவிறுப்பான ஷூட்டிங்... அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

ஆவலோடு எதிர்பார்த்த விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட பிக்கிலி இவன் தான்.. ட்ரண்டாகும் அட்டகாசமான வீடியோ பாடல் இதோ!
சினிமா

ஆவலோடு எதிர்பார்த்த விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட பிக்கிலி இவன் தான்.. ட்ரண்டாகும் அட்டகாசமான வீடியோ பாடல் இதோ!