ஆஸ்கார் வென்ற RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய நடனப்புயல் பிரபுதேவா! ட்ரெண்டாகும் வீடியோ இதோ

ஆஸ்கார் வென்ற RRR பட நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய பிரபுதேவா,prabhu deva dances for rrr movie naatu naatu song | Galatta

தனது நான் ஈ , பாகுபலி 1&2 ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து  இந்தியாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்த இயக்குனர் SS.ராஜமௌலி தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பாக இயக்கிய திரைப்படம் RRR. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்த RRR திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்து உலக அளவில் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR படத்தில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலக அளவில் பல சர்வதேச விருதுகளை வென்று குவித்து வரும் RRR திரைப்படம், உலக சினிமாவில் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருதை சமீபத்தில் வென்றது. RRR திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை இசையமைப்பாளர் MM.கீரவாணி கைப்பற்றினார். 

தொடர்ந்து உலக சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகளுக்கும் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக கடந்த மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கார் விருதுகளின் மேடையில் நாட்டு நாட்டு பாடல் உலகத்திரை பிரபலங்களுக்கு விருந்தாக சமர்ப்பிக்கப்பட்டது. தொபர்ந்து ஒட்டு மொத்த இந்தியாவே பெருமை கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படமாக ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருதையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இசையமைப்பாளர் MM.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் ஆஸ்கார் விருதுகளை பெற்றுக் கொண்டனர். பாடல் வெளிவந்த நாள் முதலே சமூக வலைதளங்களிலும் சக்கை போடு போட்ட நாட்டு பாடலை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ் செய்து ரசிகர்கள் மகிழ்ந்தனர். பல பிரபலங்களும் கூட நாட்டு நாட்டு நாட்டு பாடலின் பிரத்யேக நடன அசைவுகளை ஆடி வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர்.

அந்த வகையில் தற்போது இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடனப்புயல் பிரபு தேவா அவர்களும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடியுள்ளார். நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் பிரபுதேவா அவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த பஹீரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அறிமுக இயக்குனர் சாம் ஜோடிக்ரூஸ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக முஸாஸி, டாடா திரைப்படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் அன்பு எழுதி இயக்கும் ரேக்ளா, இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் ஃபளாஷ் பேக் உள்ளிட்ட படங்கள் பிரபுதேவா நடிப்பில் வெளிவர உள்ளன.இந்நிலையில் மிகப்பெரிய நடன கலைஞர்களின் குழுவோடு நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபு தேவா அவர்கள் வெளியிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்த வீடியோ இதோ…
 

NAATU NAATU ❤️❤️❤️❤️❤️to the TEAM 🙏 pic.twitter.com/g58cQlubCp

— Prabhudheva (@PDdancing) March 18, 2023

'வேற மாறி வந்திருக்கேன்.. என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க!'- பத்து தல இசை வெளியீட்டில் மாஸாக பேசிய சிலம்பரசன்TRன்! முழு வீடியோ இதோ
சினிமா

'வேற மாறி வந்திருக்கேன்.. என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க!'- பத்து தல இசை வெளியீட்டில் மாஸாக பேசிய சிலம்பரசன்TRன்! முழு வீடியோ இதோ

“AGR வரார்... போட்றா வெடிய!”- சிலம்பரசன்TRன் பக்கா மாஸ் பத்து தல படத்தின் அதிரடியான ACTION PACKED ட்ரெய்லர் இதோ!
சினிமா

“AGR வரார்... போட்றா வெடிய!”- சிலம்பரசன்TRன் பக்கா மாஸ் பத்து தல படத்தின் அதிரடியான ACTION PACKED ட்ரெய்லர் இதோ!

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் அசத்தலான ஹாரர் காமெடி சரவெடி… கோஸ்டி படத்தின் கலகலப்பான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் அசத்தலான ஹாரர் காமெடி சரவெடி… கோஸ்டி படத்தின் கலகலப்பான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!