மம்மூட்டி & மோகன்லால் என்ன BAN பண்ணாங்களா? உண்மையை உடைத்த நடிகை ஷகீலாவின் பதில் இதுதான்! வீடியோ உள்ளே

மம்முட்டி & மோகன்லால் குறித்து பேசிய நடிகை ஷகீலா,shakeela opens about mammootty and mohanlal banned her | Galatta

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்த நடிகை ஷகீலா அவர்கள் தனது கவர்ச்சியான நடிப்பதால் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள நடிகை ஷகீலா கடந்த 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கியவர். குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிக படங்களில் ஷகீலா முக்கிய வேடங்களிலும் கவர்ச்சியான கதை பாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். ஷகீலா என்றாலே கவர்ச்சி தான் என்ற ஒரு கண்ணோட்டம் இருந்த நிலையில், தற்போது அந்த மொத்த கண்ணோட்டமும் மாறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

அதுவரை ஷகீலா நடித்த திரைப்படங்களின் கதாபாத்திரங்களை கொண்டு அவர் மீது இருந்த பார்வை முற்றிலுமாக மாறி ஷகீலா அம்மா என ரசிகர்கள் அனைவரும் கொண்டாடத் தொடங்கினர். இந்த நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசியபோதும் பல சுவாரசியமான தகவல்களை ஷகீலா பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "மலையாள சினிமாவில் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் நீங்கள் தான் மிகப்பெரிய போட்டியாக இருக்கிறீர்கள் என்று உங்களது படங்களை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் நடந்ததாக சொல்கிறார்களே அதெல்லாம் உண்மையா?" என கேட்ட போது,

“அதெல்லாம் உண்மை தான்.. ஆனால் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. நான் மோகன் லால் சார் அவர்களின் ரசிகை. மம்மூக்கா (மம்மூட்டி) மீது எனக்கு எந்தவிதமான கோபமும் கிடையாது. ஆனால் அவர் தான் இதை ரொம்ப INFLUENCE செய்ததாக கேள்விப்பட்டேன். ஆனால் இப்போது நான் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று இருந்தேன். அந்தக் கோவில் உடைய சேர்மன் மம்மூட்டி அவர்களிடம் கேட்டிருக்கிறார். அப்போது, “கட்டாயமாக அந்த பெண்ணை கூப்பிடுங்கள். ஒரு கட்டத்தில் சினிமாவே முடிவடையும் காலகட்டத்தில் திரையரங்குகள் எல்லாம் தொடர்ந்து மூடப்பட்ட காலகட்டத்தில் அந்தப் பெண் கை கொடுத்தது.” என்று அவர் சொல்லியிருக்கிறார். அதனால் அதையும் நான் சொல்ல வேண்டும். எங்கேயுமே இதெல்லாம் இருக்கும் அவர்கள் 4 கோடி ரூபாய் போட்டு படம் எடுக்கிறார்கள். நாங்கள் 15 லட்சம் ரூபாயில் ஒரு படம் செய்து அந்த 4 கோடி ரூபாய் படத்தை ஃபிளாப் செய்தோம் என்றால் யாருக்காக இருந்தாலும் அந்த பாதிப்பு இருக்கும் அல்லவா? அந்த மாதிரி தான் இருந்திருக்கும். அவர்கள் எல்லாம் தடை செய்யவில்லை. அவர்கள் இப்படி எல்லாம் செய்வதற்கு முன்பாக, நானே முன்வந்து படத்தில் எல்லாம் நடிக்க மாட்டேன் என சொன்னது என்னுடைய ஸ்டைல்” என பதில் அளித்தார்.

தொடர்ந்து "அந்த மாதிரியான காலகட்டத்தில் இந்த விஷயங்களை கடந்து வந்த போது கஷ்டமாக இல்லையா?" எனக் கேட்டபோது, "கஷ்டம் எல்லாம் ஒன்றும் இல்லை." என பதிலளித்தார். "அப்படி நீங்கள் நடிக்க மாட்டேன் என சொன்ன போது அந்த ஒரு 21 பேர் உங்களை நம்பி தான் பணம் கொடுத்திருப்பார்கள் அவர்களிடம் நீங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கும் போது அவர்கள் உங்களை எதுவும் கேட்கவில்லையா?" எனக் கேட்டபோது, "அதையாவது கொடுத்தார்களே என சந்தோஷப்பட்டிருப்பார்கள். யார் கொடுப்பார்கள் நான் கொடுத்த தேதிகளில் நீங்கள் படம் செய்யவில்லையே அது உங்களது பிரச்சனை என சொல்லிவிட்டு போக வேண்டும். நான் பண்ண மாட்டேன் என திருப்பி கொடுத்தற்கு என்னை பாராட்டி விட்டு தான் சென்றார்கள்." என பதில் அளித்துள்ளார். நடிகை ஷகீலாவின் அந்த முழு பேட்டி இதோ…
 

“நான் இங்கே நிற்க காரணம் நான் ஈன்றெடுத்த மகன்!”- சிலம்பரசன்TRன் பத்து தல பட இசை வெளியீட்டை அதிர வைத்த Tராஜேந்தர்! வீடியோ உள்ளே
சினிமா

“நான் இங்கே நிற்க காரணம் நான் ஈன்றெடுத்த மகன்!”- சிலம்பரசன்TRன் பத்து தல பட இசை வெளியீட்டை அதிர வைத்த Tராஜேந்தர்! வீடியோ உள்ளே

'வேற மாறி வந்திருக்கேன்.. என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க!'- பத்து தல இசை வெளியீட்டில் மாஸாக பேசிய சிலம்பரசன்TRன்! முழு வீடியோ இதோ
சினிமா

'வேற மாறி வந்திருக்கேன்.. என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க!'- பத்து தல இசை வெளியீட்டில் மாஸாக பேசிய சிலம்பரசன்TRன்! முழு வீடியோ இதோ

“AGR வரார்... போட்றா வெடிய!”- சிலம்பரசன்TRன் பக்கா மாஸ் பத்து தல படத்தின் அதிரடியான ACTION PACKED ட்ரெய்லர் இதோ!
சினிமா

“AGR வரார்... போட்றா வெடிய!”- சிலம்பரசன்TRன் பக்கா மாஸ் பத்து தல படத்தின் அதிரடியான ACTION PACKED ட்ரெய்லர் இதோ!