எல்லா ரெக்கார்டுகளையும் அடித்து நொறுக்கிய தளபதி விஜயின் லியோ பட அதிரடி ட்ரெய்லர்... வெளியான 24 மணி நேரத்தில் செய்த மாஸ் சாதனை!

தளபதி விஜயின் லியோ பட ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் செய்த சாதனை,thalapathy vijay in leo crossed 47 million views in 24 hours on youtube | Galatta

மிரட்டலான ஆக்சன் காட்சிகள் நிறைந்த ட்ரெய்லராக ரசிகர்களை கவர்ந்த தளபதி விஜயின் லியோ பட ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் எல்லா யூடியூப் சாதனைகளையும் அடித்து நொறுக்கி புதிய சாதனை படைத்துள்ளது. மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படம் பக்கா ஆக்சன் படமாக வருகிற வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் தளபதி விஜய் உடன் லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுனனின் கதாபாத்திரங்களான ஆண்டனி தாஸ் , ஹெரால்டு தாஸ் உடன் லியோ தாஸ் என்ற கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்திருக்கிறார் என தெரிகிறது. ட்ரெய்லரில் "பார்த்தி" என்ற பெயரில் தளபதி விஜயின் கதாபாத்திரம் குறிப்பிட்டு இருப்பதால் இது இரட்டை வேடமா அல்லது தலைமறைவான வாழ்க்கையா என ரசிகர்கள் பதில் பல சுவாரஸ்யமான கேள்விகள் எழுந்துள்ளன. முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. 

இதுவரை தென்னிந்திய திரையுலகில் எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு, தளபதி விஜய்யின் திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் இப்படத்தை வெளியிட முடிவு செய்த பட குழுவினர் 25000 முதல் 30000 திரையரங்குகள் வரை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. வட இந்தியாவில் மட்டும் 2000 திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் சர்ப்ரைசாக தென்னிந்தியாவில் லியோ திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற இருப்பதும் அது குறித்து அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று அக்டோபர் 5ம் தேதி வெளிவந்து ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு இன்னும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் லியோ ட்ரெய்லர் வெளிவந்த 24 மணி நேரத்தில் எல்லா Youtube ரெக்கார்டுகளையும் உடைத்து சாதனை படைத்திருக்கிறது. மொத்தமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் சேர்த்து 47 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த லியோ ட்ரெய்லர் 3.7 மில்லியனுக்கும் மேலான லைக்குகள் பெற்று தென்னிந்திய சினிமா வரலாற்றில் எந்த படமும் படைத்திடாத அதிரடியான மாஸ் சாதனை படைத்திருக்கிறது. லியோ ட்ரெய்லரின் 24 மணி நேர சாதனை குறித்த அறிவிப்பு இதோ…
 

R̶e̶c̶o̶r̶d̶s̶ Rest in peace 💣

47M+ cumulative real time views & 3.7M+ cumulative likes for #LeoTrailer in 24 hours 🔥
Leo leo leo leo veridhan 💥#LeoTrailer ▶️

Tamil: https://t.co/80TQzvpCWf

Telugu: https://t.co/Sk8EzgqwxR

Kannada: https://t.co/KvY4TpbmZY

Hindi:… pic.twitter.com/fhO2Z1uGxm

— Seven Screen Studio (@7screenstudio) October 6, 2023