கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர்.

குறிப்பாக இவர்களது சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.திருமணம்,உயிரே,ஓவியா,அம்மன்,இதயத்தை திருடாதே,மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.சமீபத்தில் இவர்களது சூப்பர்ஹிட் தொடரான திருமணம் தொடர் நிறைவுக்கு வந்தது.

மற்ற தொடர்கள் விறுவிறுப்பாக தங்கள் ஒளிபரப்பை தொடர்ந்து வருகின்றனர்.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று வந்தாள் ஸ்ரீதேவி.2018 முதல் 2019 வரை ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடரின் ஹீரோயினாக அனன்யா மணி நடித்திருந்தார்.

இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அனன்யா மணி.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் அனன்யா அவ்வப்போது தனது போட்டோக்களையும்,வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.தற்போது ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.அப்போது ரசிகர் ஒருவர் உங்க இடுப்புல இருக்க டாட்டூ,கல்யாணம் பண்ணிக்கலாமா என்று ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பினர்,அதற்கு மிக கூல் ஆக செம ஜாலியாக இவர் பதிலளித்துள்ளார் இவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.