தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் நட்சத்திர நாயகனாகவும் விளங்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. ஆக்ஷன் திரில்லர் படமாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாக நடித்து வெளிவந்த வலிமை திரைப்படம்  பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

முன்னதாக நேர் கொண்ட பார்வை & வலிமை என அடுத்தடுத்த திரைப்படங்களில் இணைந்த அஜித்குமார்-H.வினோத் கூட்டணியில் 3-வதாக தயாராகிறது AK61 திரைப்படம். இது வெறும் அஜித்-H.வினோத் கூட்டணி மட்டுமல்ல, போனிகபூர்-அஜித் குமார்-H.வினோத்-நீரவ்ஷா கூட்டணியில் உருவாகும் 3-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

#AK61 திரைப்படத்திற்கான அஜித்குமாரின் புதிய லுக் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் #AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் #AK61 திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து முதல்முறையாக கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் #AK61 திரைப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விமான ஓடுதளத்தில் #AK61 படக்குழுவினருடன் அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வீடியோ இதோ…