இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற கலைஞரான உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

உலகநாயகனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியிருக்கும் விக்ரம் படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.  அனிருத் இசையில் உலகநாயகன் எழுதி பாடி வெளிவந்த "பத்தல பத்தல" பாடல் தற்போது யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது.

முன்னதாக கடந்த மே 15 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ட்ரெய்லர் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழா விஜய் டிவியில் வருகிற மே 22ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதன் முன்னோட்டமாக தற்போது புரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த ப்ரோமோ வீடியோகள் இதோ…