ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்றாக செம்பருத்தி உள்ளது.இந்த தொடரில் ஹீரோ ஹீரோயினாக அக்னி மற்றும் ஷபானா நடித்து வருகின்றனர்.ப்ரியா ராமன் மற்றொரு முக்கிய வேடமான அகிலாண்டேஸ்வரி வேடத்தில் நடித்து அசத்தி வந்தார்.

இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான ஆதி-பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடரில் சில முக்கிய மாற்றங்கள் நடந்தன.

புதிய நடிகர்கள் வந்தாலும் தொடரின் பரபரப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.பல பிரச்சனைகளை,பல புது என்ட்ரியை கடந்து இந்த தொடர் 1400 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக சென்று வருகிறது.

பெரிய வெற்றி தொடராக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் வெகு விரைவில் நிறைவடையவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.1000 எபிசோடுகளை கடந்து ஜீ தமிழின் முக்கிய தொடராக இருந்து வரும் இந்த தொடர் நிறைவடையும் செய்தி இந்த தொடரின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.