ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்றாக செம்பருத்தி உள்ளது.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பெரிய பெற்றவர் ஷபானா.

இவரது நடிப்பை பலரும் இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.சின்னத்திரையின் கனவுக்கன்னியாக வெகு விரைவில் உருவெடுத்தார் ஷபானா.இவருக்கு எப்போது கல்யாணம் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இவர் பிரபல சீரியல் நடிகர் வேலு லக்ஷ்மணன் என்னும் ஆர்யனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.ஆர்யன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.இவர்கள் இருவரும் காதலித்து வருவது இவர்களது சில போஸ்ட்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிந்தது.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

இதுவரை மறைமுமாக சில போஸ்ட்கள் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர்.முதல்முறையாக ஆர்யனுடன் இருக்கும் புகைப்படத்தை ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.விரைவில் தம்பதியாகவுள்ள இருவருக்கும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.