ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.

கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்,இதற்கு செம்பருத்தி சீரியல் பிரபலங்களும் விதிவிலக்கல்ல.ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது,இன்ஸ்டாகிராமில் லைவ் வருவது என்று அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தனர்.

கொரோனா பாதிப்பால் மூன்று மாதங்கள் பாதிக்கப்பட்ட ஷூட்டிங் மீண்டும் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.புதிய எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார் VJ கதிர்.தொகுப்பாளராகவும்,டான்சர் ஆகவும் தனது திறமையை வெளிப்படுத்திய கதிர்.செம்பருத்தி தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவராக ஆனார் கதிர்.

இவருக்கு கடந்த ஜூலை 3ஆம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது.இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி இவரது திருமணம் முடிந்தது.இது குறித்து பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கதிருக்கு தெரிவித்து வந்தனர்.தற்போது கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்,லாக்டவுன்ல லாக் ஆகிட்டேன்,இந்த லாக்டவுனுக்கு தளர்வே கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.உங்கள் ஜோடி பிரமாதமாக உள்ளது என்று ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.