அடுத்தடுத்த படங்களுடன் வருகிறார் ஜெயம் ரவி.. 'அகிலன்' வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு - ரசிகர்கள் வைரலாக்கி வரும் அட்டகாசமான போஸ்டர் இதோ..

ஜெயம் ரவி நடித்த அகிலன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு - Jayam Ravi Agilan Movie Release date is here | Galatta

கடந்த 2003 ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த ஜெயம் ரவி தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வந்தார். ஆரம்ப காலக் கட்டத்தில் அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்திலே அவரது பெரும்பாலான படங்கள் வெளியானது. இருந்தாலும் தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகனாக ஜெயம் ரவி உருவெடுத்தார். ஜெயம் ரவி படங்களை மக்கள் முழு நம்பிக்கையுடன் பார்த்து திருப்தியுடன் வரலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் ஜெயம்ரவி. திரைத்துறையில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த ஜெயம் ரவி ஏறத்தாழ 25 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.  வித்யாசமான தோற்றத்தில் தனித்துவமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து பல படங்கள் மெகா ஹிட் கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.

கடந்த ஆண்டு மணிரத்னம் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார் ஜெயம் ரவி. தற்போது ஜெயம் ரவி நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் வரிசையில் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்’, அஹமத் இயக்கத்தில் ‘இறைவன், மற்றும் அகிலன் ஆகிய படங்கள் உள்ளனர். இதில் அனைத்து படங்களுக்குமே தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் குறிப்பாக கல்யான் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 28 வது படமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அகிலன்’ .

இந்த திரைப்படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. துறைமுகம் சார்ந்த கதைக்களத்தில் வித்யாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் அதிகம் கவர்ந்தது.  ஜெயம்ரவி, பிரியா பவானி சங்கர், தான்யா ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருக்கும் அகிலன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகவிருந்தது. பின் சில காரணங்களினால் படம் வெளியாகாமல் தள்ளி போனது. இருந்தாலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு சற்றும் குறையாமல் இருந்தது. இந்நிலையில் ஸ்க்ரீன் சீன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அகிலன் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 10 ம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த அறிவிப்பினை ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

consumer court justice to the bus passenger against bmtc in vijay tamizhan film style

Happy to announce, #Agilan will be releasing worldwide on March 10th in theatres !!! God bless 🙏🏼#AgilanFromMarch10
@Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @shiyamjack @vivekcinema @RVijaimurugan @Pallavi_offl @skiran_kumar @senthilkumarsmc pic.twitter.com/pWLPUi4fMu

— Jayam Ravi (@actor_jayamravi) February 22, 2023

அகிலன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்ஷோசம் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் காலங்களில் படம் குறித்த அப்டேட்டுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 28 ம் தேதி 'பொன்னியின் செல்வன் 2'  வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் சேதுபதியை Impress செய்த பிரபல நகைச்சுவை கலைஞர் - அட்டகாசமான  Surprise Gift.. வைரல் பதிவு இதோ..
சினிமா

விஜய் சேதுபதியை Impress செய்த பிரபல நகைச்சுவை கலைஞர் - அட்டகாசமான Surprise Gift.. வைரல் பதிவு இதோ..

விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த வெற்றிமாறன்.. -  வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த வெற்றிமாறன்.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

‘டாடா’ படத்தை பார்த்து விட்டு தனுஷ் பண்ண போன் கால்.. நெகிழ்ச்சியில் கவின்.. - ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

‘டாடா’ படத்தை பார்த்து விட்டு தனுஷ் பண்ண போன் கால்.. நெகிழ்ச்சியில் கவின்.. - ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..