1 ரூபாய் சில்லறைக்கு 2000 ரூபாய் அபராதம்.. - தளபதி விஜயின் ‘தமிழன்’ படத்துடன் ரசிகர்கள் ஒப்பீடு.. விவரம் இதோ..

தமிழன் பட பாணியில் BMTC க்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் - Consumer court justice to the Bus Passenger against BMTC | Galatta

கடந்த 2002 ஆண்டு விஜய், பிரியங்கா சோப்ரா , ரேவதி ஆகியோர் நடித்து இயக்குனர் மஜீத் இயக்கிய திரைப்படம் 'தமிழன்'. அட்டகாசமான நீதிமன்ற கதைகளத்தை கொண்ட  திரைப்படமாக அப்போது வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமானது. மேலும் குடிமக்களின் அடிப்படை சட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய படமாக தமிழன் திரைப்படம் அமைந்திருந்தது. 90 களில் பிறந்தவர்கள் இந்த படத்தை மறக்கமாட்டர்கள்.. சட்ட விதிமீறல்களுக்கு எதிராக தளபதி விஜய் வெள்ளை பேப்பரை எடுத்து மாஸ் காட்டும் காட்சிகளுக்கே தனி ரசிகர் உண்டு. இந்த திரைப்படத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு காட்சி என்றால் மீதி சில்லறை தராமல் பயணியை தகாத வார்த்தையில் திட்டும் நடந்துனரை விஜய் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, நடத்துனர் முதல் போக்குவரத்து துறை அதிகாரி வரை தண்டனை வாங்கி கொடுத்து பாதிக்கப்பட்ட பயணிக்கு நிவாரணம் வாங்கி தரும் கட்சி படத்தில் அதிகம் பேசப்பட்ட காட்சி. இந்த காட்சியை போல் பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

drums sivamani shares the last moment with late mayilsamy

கடந்த 2019 ம் ஆண்டில் ரமேஷ் நாயக் என்பவர் பிஎம்டிசி பேருந்தில் சாந்திநகர் பகுதியிலிருந்து மெஜஸ்டிக் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். 29ரூபாய் கட்டணம் உள்ள பயணசீட்டு வழங்கிய நடத்துனரிடம் 30ரூபாய் கொடுத்துள்ளார் ரமேஷ். மீதம் 1 ரூபாய் கொடுக்காமல் பயணியை தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதனையடுத்து ரமேஷ் நுகர்வோர் நீதிமன்றத்தில் 15,000 ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார் ரமேஷ்.

இந்த வழக்கை ஆராய்ந்த பெங்களூரு நகர்ப்புற நுகர்வோர் தீர்வு ஆணையம் பிஎம்டிசி க்கு நீதிமன்ற கட்டணமாக 1000 ரூபாயும் நிவாரணமாக 2000 ரூபாயும் செலுத்துமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்காத பிஎம்டிசி இது எல்லாம் ஒரு வழக்கா..என்று அலட்சியம் காட்டி சேவை தரப்பில் எந்தவொரு குறையும் இல்லை. எனவே புகார் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி எதிர்பிரமாணம் தாக்கல் செய்தது. இந்த செயல்பாடு குறித்து பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் இது நிறுவனத்திற்கு பெரிய விஷயமாக இல்லை என்று இருக்கலாம் ஆனால் பயணிக்கு இது உரிமை பிரச்சனை. அதனால் இழப்பீட்டை 45 நாட்களுக்குள் வழக்க வேண்டும் என்று அதிரடி காட்டியது. மேலும் அபராதம் செலுத்த தவறினால் ஆண்டுக்கு 6000 ரூபாய் வட்டியாக செலுத்த வேண்டும் என்று பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தை எச்சரித்துள்ளது. இந்த வழக்கின் முடிவு மக்களுடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த வழக்கை தளபதி விஜய் நடித்த தமிழன் படத்தின் காட்சியுடன் ஒப்பிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த வெற்றிமாறன்.. -  வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த வெற்றிமாறன்.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

‘டாடா’ படத்தை பார்த்து விட்டு தனுஷ் பண்ண போன் கால்.. நெகிழ்ச்சியில் கவின்.. - ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

‘டாடா’ படத்தை பார்த்து விட்டு தனுஷ் பண்ண போன் கால்.. நெகிழ்ச்சியில் கவின்.. - ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

“தனுஷ் கிடைக்க திரையுலகம் தவம் செய்திருக்க வேண்டும்..” வாத்தி திரைப்படத்தை புகழ்ந்த இயக்குனர் பாரதிராஜா -  வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“தனுஷ் கிடைக்க திரையுலகம் தவம் செய்திருக்க வேண்டும்..” வாத்தி திரைப்படத்தை புகழ்ந்த இயக்குனர் பாரதிராஜா - வைரலாகும் வீடியோ இதோ..