தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக நடிகராக தயாரிப்பாளராக பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிற இயக்குனர்  M.சசிகுமார் நடிப்பில், ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய் மற்றும் நா நா ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக சமீபத்தில் ஆயுத பூஜை வெளியீடாக சசிகுமார் & ஜோதிகா இணைந்து நடித்த உடன்பிறப்பே வெளியான நிலையில் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 4ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக ரிலீசாகிறது சசிகுமார் & சத்யராஜ் இணைந்து நடித்துள்ள எம்ஜிஆர் மகன்.

அந்த வகையில் நவம்பரில் வெளியாகிறது M.சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா. REDHAN The cinema people நிறுவனம் தயாரிப்பில், சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குனர் S.R.பிரபாகரன் இயக்கியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்க சூரி, மறைந்த இயக்குனர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி ஆகியோரும் நடித்துள்ளனர்.

N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியானது. வருகிற நவம்பர் 26-ஆம் தேதி கொம்பு வச்ச சிங்கம்டா திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் 25-ஆம் தேதி சிலம்பரசனின் மாநாடு திரைப்படம் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.