தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், முன்னதாக நடிகை ஜோதிகா உடன் இணைந்து நடித்த “உடன்பிறப்பே” அக்டோபர் 14-ஆம் தேதி அமேசான் பிரைம்-ல் வெளியானது.தொடர்ந்து ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் நா நா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. 

அந்த வகையில் முன்னதாக  தீபாவளி வெளியீடாக ரிலீசாகிறது சசிக்குமாரின் எம்ஜிஆர் மகன்.வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் எம்ஜிஆர் மகன் படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சத்யராஜ், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபல பாடகர் ஆண்டனி தாசன் எம்ஜிஆர் மகன் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகவேண்டிய எம்ஜிஆர் மகன் திரைப்படம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது இதனையடுத்து வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி ரிலீஸாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக எம்ஜிஆர் மகன் திரைப்படம் வெளியாகிறது.