உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உலக சாதனை முயற்சியாக வெளிவந்துள்ள இரவின் நிழல் படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. முன்னதாக இரவின் நிழல் படத்தில் கதாநாயகி நடிகை ப்ரிகிடா பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது படத்தில் இருக்கும் கெட்ட வார்த்தைகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்து வருத்தம் தெரிவித்த ப்ரிகிடா தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் இந்த சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குனர் பார்த்திபனும் ப்ரிகிடாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்து பதிவிட்டார்.

இதுகுறித்து இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே!” என தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

இருப்பினும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் நடிகை ப்ரிகிடாவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பேசுபொருளாக மாறி தீவிரமடைந்தது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மனம் திறந்து வீடியோ மூலமாக விளக்கமளித்து வருத்தம் தெரிவித்து ப்ரிகிடா மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகை ப்ரிகிடாவின் அந்த வீடியோ இதோ…
 

pic.twitter.com/GadmLf1aR2

— Brigida saga (@Brigidasaga22) July 19, 2022