மலையாள சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் அஞ்சலி மேனன் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த மஞ்சடிகுரு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனையடுத்து நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான உஸ்தாத் ஹோட்டல் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார் அஞ்சலி மேனன்.

தொடர்ந்து நிவின் பாலி, துல்கர் சல்மான், நஸ்ரியா, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடிக்க வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பெங்களூர் டேஸ் திரைப்படத்தை எழுதி இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கத்தில், கடைசியாக பிரித்திவிராஜ் மற்றும் பார்வதி இணைந்து நடிக்க வெளிவந்த கூடே திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வரிசையில் அடுத்ததாக அஞ்சலி மேனன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் WONDER WOMEN.

கர்ப்பிணி பெண்களை மையப்படுத்தி, கர்ப்ப காலத்தில் செல்லும் பயிற்சி வகுப்புகளை கதைக்களமாகக் கொண்டு, அழகான திரைப்படமாக தயாராகியிருக்கும் WONDER WOMEN படத்தில் நடிகை நதியா கர்ப்பிணி பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகைகள் நித்யா மேனன் ,பார்வதி, பத்மப்ரியா, அர்ச்சனா பத்மினி, அம்ருதா சுபாஷ் மற்றும் சயனோரா பிலிப் ஆகியோர் கர்ப்பிணிப்பெண்களாக முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

RSVP & FLYING UNICORN ENTERTAINMENT நிறுவனங்கள் இணைந்து வழங்கும் WONDER WOMEN திரைப்படத்திற்கு மனிஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். நேரடியாக சோனி லைவ் தளத்தில் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி WONDER WOMEN படம் ரிலீசாகிறது. இந்நிலையில் WONDER WOMEN திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள WONDER WOMEN பட ட்ரைலர் இதோ…