தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.

இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.அடுத்ததாக சகுந்தலம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம் என பிஸியாக உள்ளார் சமந்தா.

இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் தோன்றவுள்ளார் சமந்தா.தற்போது இவர் ஒரு ஆங்கில படத்தில் நடிப்பதை அறிவித்துள்ளார்.Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.

பிரபல இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் சமந்தா நடிக்கிறார்.இதுகுறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் சமந்தா.உலகவில் பிரபலமாக உள்ள சமந்தாவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.