விஜய் டிவியின் சீரியல் இயக்குனர்களில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் பிரவீன் பென்னட்.கனா காணும் காலங்கள் தொடரில் பணியாற்றிய இவர்,இர்பான்-ரச்சிதா,கவின் உள்ளிட்டோர் இணைந்து நடித்த சரவணன் மீனாட்சி 2 தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து ரியோ-ரச்சிதா இணைந்து நடித்த சரவணன் மீனாட்சி 3 தொடரையும் இவர் இயக்கியிருந்தார்.இந்த தொடரும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து மேலும் ஒரு சூப்பர்ஹிட் தொடரை கையில் எடுத்தார் பிரவீன் பென்னட்.ஆல்யா மானசா-சஞ்சீவ் நடிப்பில் உருவான ராஜா ராணி தொடர் பெரிய வெற்றியை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா,பொம்முக்குட்டி அம்மாவுக்கு,ராஜா ராணி 2 உள்ளிட்ட தொடர்களை இயக்கி வருகிறார் பிரவீன் பென்னட்.இந்த தொடர்கள் TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.இவர் விஜய் டிவியின் பிரபல நடிகையும்,நடன கலைஞருமான சாய் ப்ரமோதிதாவை மனம் முடித்தார்.இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார்.

சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமான சாய் ப்ரமோதிதாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது அந்த புகைப்படங்களும்,வீடியோக்களும் வெளியாகி வந்தன.தற்போது பிரவீன் பென்னட்-சாய் ப்ரமோதிதா ஜோடிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இருவருக்கும் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

sai pramoditha and bharathi kannamma director praveen bennett blessed with baby boy