தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் மெகா ஹிட்டான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தியா, மாரி 2, NGK உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாய்பல்லவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளிவந்த பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் சீரிஸில் ஒரு எபிசோடில் நடித்திருந்தார். கடைசியாக தெலுங்கில் தயாராகி தமிழ் உட்பட பல மொழிகளில் ரிலீசான ஷாம் சிங்கா ராய் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த வரிசையில் அடுத்ததாக சாய்பல்லவி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் விரட்ட பர்வம். இயக்குனர் வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் விரட்ட பர்வம் படத்தில் சாய்பல்லவி மற்றும் ராணா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, பிரியாமணி, நந்திதாதாஸ், நவீன் சந்திரா, ஈஸ்வரிராவ், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் விரட்ட பர்வம் படத்திற்கு டேனி சான்சேஸ்-லோபஸ் மற்றும் திவாகர் மணி ஒளிப்பதிவு செய்ய சுரேஷ் பாபி இசையமைத்துள்ளார். இந்நிலையில் விரட்ட பர்வம் திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.