சாணிக்காயிதம் படத்தின் அதிரடியான புது ப்ரோமோ !
By Aravind Selvam | Galatta | April 30, 2022 14:33 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு தேசிய விருது வாங்கிகொடுத்தது.இதனை அடுத்து இவர் நடித்த சில படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்து சில முன்னணி படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி.அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகியுள்ள சாணி காயிதம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்,இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் செல்வா.சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் மே 6ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற வைத்துள்ளது.பட ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் தற்போது ஒரு புது அதிரடியான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்