ஆமாம் விஜய்யுடன் பேசுவதில்லை அதனால் என்ன?,உண்மையை உடைத்த இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர்

விஜய்யுடன்  பேசுவதில்லை இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர் S A Chandrasekhar talks about not talking with Thalapathy Vijay | Galatta

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனாரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர் அவர்கள் தற்போது 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து இனியா ,சாக்ஷி அகர்வால், சரவணன், ரோகினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி 3 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் நமது கலாட்டா தமிழ் பிரத்யேக பேட்டியில் கலந்து கொண்டார். இதில் படம் குறித்தும் தான் கடந்து வந்த திரைப்பயணம் குறித்தும் கலந்துரையாடினார். 

தளபதி விஜய் குறித்து பேசுகையில், “ஆமாம் பேசிக்குறதில்லை , அதனால் என்ன ? உங்களுக்கு அது பெருசா இருக்கு எனக்கு அப்படி இல்லை. பலமுறை சண்டை போட்டுக்கொள்வோம். பலமுறை சேர்ந்துகொள்வோம் , நான் ஒரு கடுமையான அப்பா, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். உங்கள் அப்பவே உங்களிடம் ஏதாச்சும் சொல்லும்போது ஏன் இப்டி பேசுறிங்கனு தோணும்ல ,ஆகையால் யாரவது கேட்டால் நான் பொய் சொல்ல மாட்டேன் . ஆமாம் பேசிக்கொள்வதில்லை என்று சொல்லுவேன். வாரிசு படம் கூட நாங்கள் ஒன்றாக தான் பார்த்தோம். நான் , என் மனைவி,விஜய், இயக்குனர், தயாரிப்பாளர் , லலித்  என எல்லோரும் படம் வெளியாவதற்கு முன் பார்த்தோம். வாழ்க்கை என்பது எல்லாமே கலந்தது தானே ,அதற்குள் என் மகன் என்னிடம் பேசவில்லை என்பதெல்லாம் எதற்கு..” என்று குறிப்பிட்டார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். பல வெற்றி திரைப்படங்களை இயக்கி புகழின் உச்சியை பெற்றவர், இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இயக்குனர் எஸ். ஏ சந்திர சேகர் அவர்கள் பேசிய முழு வீடியோ இதோ..

துணிவு குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் சமுத்திரக்கனி பேட்டி
சினிமா

துணிவு குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் சமுத்திரக்கனி பேட்டி

 சினிமாவில் அரசியல் ! அரசியலில் சினிமா ! இதை மட்டும் செய்ய வேண்டாமே! எச்.வினோத் கோரிக்கை.
சினிமா

சினிமாவில் அரசியல் ! அரசியலில் சினிமா ! இதை மட்டும் செய்ய வேண்டாமே! எச்.வினோத் கோரிக்கை.

அஜித் ஒரு பொருளாதார வல்லுநர் - உண்மையை உடைத்த எச்.வினோத்! வீடியோ உள்ளே!
சினிமா

அஜித் ஒரு பொருளாதார வல்லுநர் - உண்மையை உடைத்த எச்.வினோத்! வீடியோ உள்ளே!