துணிவு குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் சமுத்திரக்கனி பேட்டி

துணிவு குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் சமுத்திரக்கனி பேட்டி | Galatta

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் துணிவு . இதில் மஞ்சு வாரியர் ,ஜான் கொக்கன் , யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இவர் ஏற்கனவே தமிழ் மட்டும் தெலுங்கில் துணை நடிகராகவும் வில்லனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விசாரணை, சாட்டை, அப்பா, டான் ,நாடோடிகள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனரும் ஆவார்.அஜித்துடன் சமுத்திரக்கனி இணைவது இதுவே முதல்முறை.

துணிவு ஆக்க்ஷன் படமா என்று கேள்வி கேட்கப்பட்டபோது அவர் அளித்த விளக்கம்: "துணிவு ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னர். குழந்தைகளுடன் இணைந்து குடும்பமாக பார்க்க வேண்டிய படம்.ஒவ்வொருத்தரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். முக்கியமாக குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய திரைப்படம். ஏனென்றால் நம் குடும்பம் எப்படி இருக்க வேண்டும், எதிர்கால திட்டம் என்று ஒவ்வொரு பெண்ணும் நாம் என்ன சம்பாதிக்கிறோம் ,கணவர் மற்றும் குழந்தைகள் என்ன சம்பாதிக்கிறார்கள், இதை வைத்து என்ன செய்யலாம் என்று எல்லா பெண்களுமே ஆயிரம் முறை யோசிப்பார்கள் . அதே போல தான் ஆண்களும், பணத்தை பற்றி யோசிக்காதவர்கள் யாருமே கிடையாது. எல்லோரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். பார்த்து முடித்த பிறகு அவர்களின் கேலிகளுக்கு எல்லாம் அழகான விடை கிடைக்கும்.அதேபோல் திரையரங்குகளும் அதிரடியாக திருவிழாக்கோலமாக காட்சியளிக்கும். அழகான உணர்ச்சிகள், நல்ல பாடல், என எல்லாம் கலந்த கலவை தான் துணிவு," என்று கூறி இன்னும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார்.

 

அது பற்றிய காணொளி  இதோ: 

 

அஜித் பற்றிய உண்மையை உடைத்த எச்.வினோத்
சினிமா

அஜித் பற்றிய உண்மையை உடைத்த எச்.வினோத்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?.அவர் ஏற்கனவே ஒரு உயரத்தில் அமர்ந்துவிட்டார்! நடிகர் ஷ்யாமின் அதிரடி பதில்!
சினிமா

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?.அவர் ஏற்கனவே ஒரு உயரத்தில் அமர்ந்துவிட்டார்! நடிகர் ஷ்யாமின் அதிரடி பதில்!

சினிமா

"வாரிசால்" பறிபோன "துணிவு" வாய்ப்பு ! அவகாசம் கேட்டேன் - மனம் திறக்கும் நடிகர் ஷியாம்