உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனருடன் SSராஜமௌலி சந்திப்பு - நெகிழ்ச்சியில் பகிர்ந்த இனிப்பான செய்தி!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்கை நேரில் சந்தித்த SSராஜமௌலி,rrr director ss rajamouli met hollywood director steven spielberg | Galatta

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக திகழும் SS.ராஜமௌலி, இயக்கத்தில் வெளிவந்த மஹதீரா, நான் ஈ, பாகுபலி1 & 2 உள்ளிட்ட திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற நிலையில், கடைசியாக வெளிவந்த RRR திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனைகள் படைத்தது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள RRR படத்தை DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ளார். 1100 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வசூல் சாதனை படைத்த RRR விமர்சன ரீதியாகவும் பல்வேறு பாராட்டுகளையும் விருதுகளையும் வாங்கி குவித்து வருகிறது.

அந்த வகையில் நியூயார்க் ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் சிறந்த இயக்குனருக்கான விருதை SS.ராஜமௌலி வென்றார். தொடர்ந்து ஆஸ்கார் விருதுகளிலும் சிறந்த ஒரிஜினல் பாடலாக நாட்டு நாட்டு பாடல் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு RRR படத்தின் சூப்பர் ஹிட் பாடலான நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் MM.கீரவாணி அவர்கள் கோல்டன் குளோப் விருது வென்றார்.

இந்த கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் அமைப்பாளர் கீரவாணி அவர்களுடன் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், இயக்குனர் SS.ராஜமௌலி ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிலையில் கோல்டன் குளோப் விழா நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களை இயக்குனர் SS.ராஜமௌலி சந்தித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “கடவுளை சந்தித்துவிட்டேன்” என குறிப்பிட்டு இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

I just met GOD!!! ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 pic.twitter.com/NYsNgbS8Fw

— rajamouli ss (@ssrajamouli) January 14, 2023

தளபதி விஜயின் மேலாளர் தயாரிக்கும் முதல் படைப்பு... புதிய படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் இதோ!
சினிமா

தளபதி விஜயின் மேலாளர் தயாரிக்கும் முதல் படைப்பு... புதிய படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் இதோ!

அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர் - வைரலாகும் துணிவு பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் உள்ளே!
சினிமா

அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர் - வைரலாகும் துணிவு பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் உள்ளே!

லவ் டுடே நாயகி உடன் மீண்டும் இணைந்த ஜீவி... ராட்சசன் தயாரிப்பாளரின் புதிய பட விறுவிறுப்பான டீசர் இதோ!
சினிமா

லவ் டுடே நாயகி உடன் மீண்டும் இணைந்த ஜீவி... ராட்சசன் தயாரிப்பாளரின் புதிய பட விறுவிறுப்பான டீசர் இதோ!