மீண்டும் இணைந்த கவின் – சாண்டி மாஸ்டர் – surprise song இதோ..

கவின் நடிக்கும் டாடா படத்தின் பாடல் புரோமோ வெளியீடு - Kavin DaDa movie team released NTF song Promo | Galatta

பிக்பாஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கவின்.‌ இவர் முன்னதாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தற்போது தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் பட்டியலில் கவின் ஒரு நல்ல இடத்தில் வகிக்கிறார். முன்னதாக கவின் நடிப்பில் 'லிஃப்ட்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் கவின் வெள்ளித்திரையிலும் கவனம் பெறத் தொடங்கினார்.‌அதற்கு முன்பு துணை நடிகராக சில படங்களில் நடித்தாலும் வெள்ளிதிரையில் முதல் வெற்றி லிஃப்ட் படம் தான்.

தற்போது கவின் அறிமுக இயக்குனர் கணேஷ் பாபுவுடன் இணைந்து 'டாடா' படத்தில் நடித்து வருகிறார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ், ஹரிஷ், வி.டி.வி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக நடிக்கும் கவினின் டாடா படத்தின் டிரைலர் முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.ஜென் மார்ட்டின் இசையில் 'டாடா சாங்' என்ற பெயரில் பாடல் முன்னதாக வெளியானது.  தற்போது படத்தின் மற்றொரு பாடலான 'NTF' என்ற பாடல் வெளியாகியுள்ளது. சாண்டி மாஸ்டர் நடன வடிவமைப்பில் உருவாகியுள்ள பாடலுக்கான புரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு. வழக்கமான சாண்டி நகைச்சுவையுடன் புரோமோ துவங்கி அட்டகாசமான துள்ளலான நடனத்துடன் முடியும் பாடல் புரோமாவாக வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் துணிவு பட பாடலாசிரியர் வைசாக் குரலில் ஆஷிக் எழுதியுள்ள ‘NTF’ பாடல் நாளை மாலை 4.45 மணியளவில் வெளிவரவுள்ளது  

 

மேலும் கவின் நடிப்பில் நகைச்சுவை குடும்ப கதையாக உருவாகியுள்ள டாடா படத்தினை ரெட் ஜெயின்ட் மூவிஸ் இந்த மாதம் 26 ம் தேதி தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடவுள்ளது. சாண்டி மாஸ்டர் , கவின் கூட்டணி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்டது. இருவரின் கூட்டணியினாலே அந்த சீசன் பிரபலமடைந்தது என்றும் சொல்லலாம். நிகழ்ச்சியின்  இடையே கவின் பணப்பெட்டியுடன் வெளியிட்டதால் பொழுதுபோக்கு தரக்கூடிய இந்த கூட்டணி உடைந்தது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிரென்ட் ஆன இந்த கூட்டணி வெளியிலும் நல்ல நட்புடன் தொடர்வதாக பல இடங்களில் தெரியப்படுத்தி வருகின்றனர்.அதன் படி இருவரது கூட்டணியில் ‘அஸ்கு மாரோ பாடல் வெளியாகி 45 மில்லியன் பார்வையாளரை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

“இப்படி வைரலாகும்னு நினைக்கல” – காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பொன்னியின் செல்வன் பூங்குழலி .. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“இப்படி வைரலாகும்னு நினைக்கல” – காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பொன்னியின் செல்வன் பூங்குழலி .. வைரலாகும் பதிவு இதோ..

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து.. என்னென்ன படங்கள் பார்க்கலாம்?  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் படங்களின் பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து.. என்னென்ன படங்கள் பார்க்கலாம்? தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் படங்களின் பட்டியல் இதோ..

சினிமா

"குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி" - வாரிசு படக்குழு வெளியிட்ட Surprise Glimpse .. வைரலாகி வரும் வீடியோ..