சர்தார் தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படம் - கைகோர்த்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்! அதிரடி அறிவிப்பு இதோ

FIR பட இயக்குனர் மனு ஆனந்த் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் உடன் இணைகிறார்,fir movie director manu anand next film with prince pictures | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீசான திரைப்படம் சர்தார். நடிகர் கார்த்தி அட்டகாசமான இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதனை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் RJ.பாலாஜி இணைந்து நடித்துள்ள த்ரில்லர் படமான ரன் பேபி ரன் திரைப்படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரன் பேபி ரன் திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக சமீபத்தில் நடிகர் SJ.சூர்யா நடிப்பில் வெளிவந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த க்ரைம் த்ரில்லர் வெப் சீரீஸான வதந்தி வெப்சீரிஸையும் , ஆக்ஷன் கிங் அர்ஜுன் & விஜய் ஆண்டனி இணைந்து நடித்த கொலைகாரன் படத்தையும் இயக்கிய இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் அடுத்த திரைப்படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக கடந்த ஆண்டில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் அடுத்த திரைப்படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ள இந்த அறிவிப்பு இதோ…
 

We are happy to announce that we have signed @itsmanuanand (FIR Fame) for his next film. @lakku76 @venkatavmedia @johnmediamanagr

Exciting updates are on the way! pic.twitter.com/70j0KvIsRH

— Prince Pictures (@Prince_Pictures) January 13, 2023

லவ் டுடே நாயகி உடன் மீண்டும் இணைந்த ஜீவி... ராட்சசன் தயாரிப்பாளரின் புதிய பட விறுவிறுப்பான டீசர் இதோ!
சினிமா

லவ் டுடே நாயகி உடன் மீண்டும் இணைந்த ஜீவி... ராட்சசன் தயாரிப்பாளரின் புதிய பட விறுவிறுப்பான டீசர் இதோ!

அஜித் சார அடிக்கிற சீன்ல ஃபேன்ஸோட ரியாக்சன் பாத்துட்டு... வைரலாகும் துணிவு பட நடிகரின் சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

அஜித் சார அடிக்கிற சீன்ல ஃபேன்ஸோட ரியாக்சன் பாத்துட்டு... வைரலாகும் துணிவு பட நடிகரின் சிறப்பு பேட்டி இதோ!

ஃட்ரெண்ட்ங்கில் மாஸ் காட்டிய தளபதி விஜயின் வாரிசு இசை வெளியீட்டு விழா- அட்டகாசமான TRP ரிப்போர்ட் இதோ!
சினிமா

ஃட்ரெண்ட்ங்கில் மாஸ் காட்டிய தளபதி விஜயின் வாரிசு இசை வெளியீட்டு விழா- அட்டகாசமான TRP ரிப்போர்ட் இதோ!