கன்னட சின்னத்திரையில் தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்து பின்னர் கன்னட சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ராஷ்மிதா ரோஜா.கன்னடத்தில் சில முக்கிய படங்களில் ஹீரோயின் மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார் ராஷ்மிதா ரோஜா.

கன்னடத்தில் பிரபலமான நடிகையாக மாறிய இவர் அடுத்து தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான பொம்முக்குட்டி அம்மாவுக்கு தொடரில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்த தொடர் சில காரணங்களால் விரைவில் முடிக்கப்பட்டது.இந்த தொடர் மூலம் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரெட்டை ரோஜா தொடரில் ஒரு நாயகியாக நடித்து அசத்தி வருகிறார் ராஷ்மிதா.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் ராஷ்மிதா ரோஜா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடரான வேலைக்காரன் தொடரில் புது என்ட்ரியாக இவர் இணைந்துள்ளார் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.