தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வினால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் விஷ்ணு விஷால்.இவர் நடித்துள்ள காடன் திரைப்படம் கடைசியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் அடுத்ததாக FIR,மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது FIR திரைப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஜுவாலா கட்டாவை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

பொதுவாக ஒரு மொழி நடிகர் மற்ற மொழிகளிலும் அவ்வப்போது நடித்து வருவார்கள் அப்படி சில படங்கள் செம ஹிட்டும் அடித்துள்ளன.இந்த ட்ரெண்ட் தற்போது வெகுவாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது.விஷ்ணு விஷால் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவிதேஜாவுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

விரைவில் ரவிதேஜாவுடன் ஒரு படத்தில் இணைவதை உறுதிசெய்துள்ளார் விஷ்ணு விஷால்.ரவிதேஜா போன்ற ஒரு மாஸ் ஹீரோவுடன் விஷ்ணு விஷால் இணைவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த படம் குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.