தளபதி விஜயின் லியோ உடன் களமிறங்கும் ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ்... ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு படக்குழுவின் அதிரடி பதில்!

ரவிதேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ் ரிலீஸ் வதந்திகளுக்கு படக்குழு பதில்,ravi teja tiger nageswara rao crew clarifies on rumours about release | Galatta

தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என கொண்டாடப்படும் நடிகர் ரவி தேஜாவின் திரை பயணத்தில் முதல் PAN INDIA படமாக பிரம்மாண்டமாக தயாராகி வரும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தின் வதந்திகளுக்கு படக்குழு தரமான பதிலளித்துள்ளது. ஆந்திராவின் ஸ்டூரத்புரம் பகுதியில் 1970களில் மிகப் பிரபலமான மற்றும் பயங்கரமான கொள்ளைக்காரனாக வலம் வந்த நாகேஸ்வர ராவ்-ன் பயோபிக் படமாக தயாராகும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ண நாயுடு இயக்குகிறார். ரவி தேஜா உடன் இணைந்து காயத்ரி பரத்வாஜ், நிப்பூர் சனான் உள்ளிட்ட பலர் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தில் நடிக்கின்றனர். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரிக்க, பிரம்மாண்ட திரைப்படமாக  தயாராகும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவு ஒளிப்பதிவு செய்ய, ஜீவி ப்ரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ரவி தேஜாவின் மிரட்டலான ஆக்ஷனில் வெளிவரும் டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டில் அக்டோபர் 20ஆம் தேதி ஆயுதபூஜை வெளியீடாக ரிலீஸாக இருக்கும் நிலையில் முன்னதாக அக்டோபர் 19ஆம் தேதி தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி வரும் இந்த லியோ திரைப்படம் அக்கா அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக ரசிகர்களுக்கு விருந்தாக வர தயாராகி வருகிறது.

ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ் மற்றும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவின் மற்றொரு நட்சத்திர நாயகராக பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழும் நந்தாமுரி பாலகிருஷ்ணா அவர்கள், இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடித்துள்ள பகவந்த் கேசரி திரைப்படமும் இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் ராம் பொத்திநேனி நடித்துள்ள ஸ்கந்தா படமும் இதே ஆயுத பூஜை வெளியிடாக அக்டோபர் 19-20ஆம் தேதிகளில் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது. நான்கு மாஸ் ஹீரோக்களின் நான்கு அதிரடி ஆக்சன் திரைப்படங்கள் இந்த ஆயுத பூஜையில் அதிரடி விருந்தாக வெளிவர இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர்.

இதனிடையே பெரிய படங்கள் ரிலீஸாவதால் டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிவந்தன. இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், “எந்த அடிப்படையும் இல்லாமல் டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படம் அக்டோபர் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடி ரிலீஸ் ஆகாது என தகவல்கள் பரவி வருகின்றன. படம் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில் சிலர் இந்த வதந்திகளை வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள். எனவே எந்த வதந்திகளையும் நீங்கள் நம்ப வேண்டாம். அட்டகாசமான சினிமா அனுபவத்தை உங்களுக்கு கொடுப்பதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம் டைகர் அறிவித்தபடி அக்டோபர் 20ஆம் தேதி பாக்ஸ் ஆபிஸில் வேட்டையை நடத்தும்.” என படக்குழு தரமான பதிலடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ…
 

#TigerNageswaraRao 🥷 HUNTING IN CINEMAS WORLDWIDE FROM OCTOBER 20TH 🔥@RaviTeja_offl @DirVamsee @AbhishekOfficl @AnupamPKher #RenuDesai @NupurSanon @gaya3bh @Jisshusengupta @gvprakash @madhie1 @artkolla @CastingChhabra @SrikanthVissa @MayankOfficl @ArchanaOfficl @saregamasouth pic.twitter.com/wWQ6fpE2XV

— Abhishek Agarwal Arts (@AAArtsOfficial) August 1, 2023

சினிமா

"தனுஷ் அப்போவே ப்ரொடியூசர் ஃபிரண்ட்லி!"- திருடா திருடி படப்பிடிப்பின் சுவாரஸ்யங்கள் பகிர்ந்த சுப்பிரமணியம் சிவா! வைரல் வீடியோ

இறுதி கட்டத்தில் ஜீவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷின் டியர்... படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட் இதோ!
சினிமா

இறுதி கட்டத்தில் ஜீவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷின் டியர்... படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட் இதோ!

சினிமா

"இந்த தடவ மிஸ் ஆகாது!"- தளபதி விஜயின் வாரிசு பட OST ரிலீஸ் தேதியை அறிவித்த இசையமைப்பாளர் தமன்! உற்சாகத்தில் ரசிகர்கள்