"கனவு பலித்த தருணம்!"- வெளிநாடு புறப்படும் ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படக்குழு... மஹிமா நம்பியார் கொடுத்த மாஸ் ஷூட்டிங் அப்டேட்!

ராகவா லாரன்ஸ் இன் சந்திரமுகி 2 அப்டேட் கொடுத்த மஹிமா நம்பியார்,raghava lawrence in chandramukhi 2 crew went to georgia for song shoot | Galatta

இயக்குனர் பி.வாசு அவர்களின் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை நடிகை மஹிமா நம்பியார் பகிர்ந்து கொண்டார். முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களில் முக்கிய படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். 

கதையின் நாயகன் நாயகியாக ராகவா லாரன்ஸ் மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ளனர். வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார்.  அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான பக்கா ஹாரர் காமெடி ஃபேமிலி என்டர்டெயன்ராக ட்ரீட்டாக வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. எனவே அதற்காக சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறைவடைந்தது. இருப்பினும் கடைசியாக ஒரு பாடலின் படப்பிடிப்பு மீதம் இருப்பதால் இதற்காக சந்திரமுகி 2 படக்குழுவினர் தற்போது ஜார்ஜியா நாட்டிற்கு செல்கின்றனர். இது குறித்து நடிகை மகிமா நம்பியார் தனது ட்விட்டர் பக்கத்தில், ராகவா லாரன்ஸ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, “சந்திரமுகி 2 படத்தின் கடைசி பாடல் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா செல்கிறோம். நடிகையாக எனக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து நடனம் ஆட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்த கனவு பலித்த தருணம் இது. நன்றி ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். நடிகை மஹிமா நம்பியாரின் அந்தப் பதவு & புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Off to Georgia for #chandramukhi2 final song shoot!! Dream come true moment for me as an actor to have a song with the master of dance himself @offl_Lawrence 🤩🤩 Thank you☺️☺️
Excited to the core🥰@LycaProductions #Directorvasu pic.twitter.com/57ZJGFzJp7

— Mahima Nambiar (@Mahima_Nambiar) August 1, 2023

இறுதி கட்டத்தில் ஜீவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷின் டியர்... படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட் இதோ!
சினிமா

இறுதி கட்டத்தில் ஜீவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷின் டியர்... படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட் இதோ!

சினிமா

"இந்த தடவ மிஸ் ஆகாது!"- தளபதி விஜயின் வாரிசு பட OST ரிலீஸ் தேதியை அறிவித்த இசையமைப்பாளர் தமன்! உற்சாகத்தில் ரசிகர்கள்

மார்க் ஆண்டனி, D50 தொடர்ந்து செல்வராகவனின் அடுத்த ப்ராஜெக்ட்… ‘புஷ்பா’ சுனில், யோகி பாபு இணைந்த புதிய பட Shooting Spot புகைப்படங்கள்!
சினிமா

மார்க் ஆண்டனி, D50 தொடர்ந்து செல்வராகவனின் அடுத்த ப்ராஜெக்ட்… ‘புஷ்பா’ சுனில், யோகி பாபு இணைந்த புதிய பட Shooting Spot புகைப்படங்கள்!