இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ள காசேதான் கடவுளடா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவா மற்றும் யோகி பாபு காம்போவில் சலூன் திரைப்படமும் விரைவில் ரிலீசாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தமிழ் சினிமாவின் நட்சத்திர நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு இந்த 2023 ஆம் ஆண்டில் இதுவரை வெளிவந்த வாரிசு, பொம்மை நாயகி, தி கிரேட் இந்தியன் கிச்சன், கோஸ்டி, யானை முகத்தான், தமிழரசன் உள்ளிட்ட திரைப்படங்களில் மிகச் சிறப்பாக நடித்து மக்களை மகிழ்வித்தார். தொடர்ந்து இந்த வாரம் மே 19ஆம் தேதி ரிலீஸாகும் விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்திலும் நடித்துள்ள யோகி பாபு அடுத்தடுத்து வெளிவரவுள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் அயலான், இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களிலும் நகைச்சுவை வேடத்தில் அசத்தியிருக்கிறார்.
அதேபோல் தனக்கென தனி பாணியில் கலக்கல் காமெடி படங்களில் நடித்து வரும் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சுமோ திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த வரிசையில், மிர்ச்சி சிவா - யோகி பாபு காம்பினேஷனில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் தான் காசேதான் கடவுளடா. 1970களில் வெளிவந்து இன்று வரை எவர்கிரீன் ஃபேவரட் திரைப்படமாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் காசேதான் கடவுளடா திரைப்படத்தை சித்ராலயா கோபு எழுதி இயக்கியிருந்தார். ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், மனோரமா, லட்சுமி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வெளிவந்த காசேதான் கடவுளடா திரைப்படத்தின் ரீமேக்காக தற்போது இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் இந்த காசேதான் கடவுளடா திரைப்படம் தயாராகி இருக்கிறது. மசாலா பிக்ஸ் மற்றும் எம் கே ஆர் பி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள காசேதான் கடவுளடா திரைப்படத்திற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார்.
சிவா மற்றும் யோகி பாபு உடன் இணைந்து பிரியா ஆனந்த், ஊர்வசி, கருணாகரன், சிவாங்கி, புகழ், தலைவாசல் விஜய், விடிவி கணேஷ் ஆகியோரோடு மறைந்த நடிகர் மனோபாலா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காசேதான் கடவுளடா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே ரிலீஸாக இருந்த நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் E5 என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் திரு. J. ஜெயக் கிருஷ்ணன் அவர்கள் வெளியிட வருகிற மே 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் காசேதான் கடவுளடா திரைப்படம் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
#KasethanKadavulada releasing worldwide on May 26th
— Done Channel (@DoneChannel1) May 16, 2023
A #E5Entertainment #JJayakrishnan Release#KasethanKadavuladaOnMay26@actorshiva @iYogiBabu @PriyaAnand @Dir_kannanR @sivaangi_k @VijaytvpugazhO @amsmeenakshi @MasalaPix @mkrpproductions @omsaranh @saregamaglobal @SunTV… pic.twitter.com/DZ7ybGtC6p