வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இராவண கோட்டம் படத்தின் 'தலை சாஞ்சிருச்சே..' பாடலின் வீடியோ வெளியானது – வைரலாகும் Glimpse இதோ..

இராவண கோட்டம் படத்தில் இடம் பெற்ற அட்டகாசமான பாடலின் வீடியோவை வெளியிட்ட படக்குழு - Raavana kottam Movie video song out now | Galatta

கடந்த வார இறுதியில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’. மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் அடுத்த திரைப்படமாக உருவான இப்படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் , கயல் ஆனந்தி, இளவரசு, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கண்ணன் ரவி குழுமத்தினர் தயாரித்த இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இராவண கோட்டம் படத்தின் பாடல்களை, டிரைலர் வெளியாகி படம் குறித்த எதிர்பார்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது. அதன்படி கடந்த ஏப்ரல் 12 ம் தேதி . கருவேல மரத்தின் கதைக்களமாக கொண்டு உருவான இராவண கோட்டம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆரவார வரவேற்பில் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கே ஏகாதசி வரிகளில் உருவான ‘தலை சாஞ்சிருச்சே’ பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடலை பின்னணி பாடகர் அந்தோனி தாசன், மதுரை சந்திரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் புரோமோ வீடியோவாக முன்னதாக அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்து ராமலிங்கம் தேவர் வீடியோ தொகுப்பாக முன்னதாக படக்குழு வெளியிட்டது. அப்போதே இந்த பாடல் இணையத்தில் வைரலானது குறிப்பிடதக்கது.

வீடியோவில், இரு பிரிவினரின் தலைவர்களான பிரபு மற்றும் இளவரசு இறந்து இறுதி ஊர்வலமாக ஊரை சுற்றி ஆட்டம் பாட்டம் குமுறலுடன் ஊர் மக்கள் இடுகாடு அழைத்து செல்லும் போது இடம் பெரும் பாடலாக தலை சாஞ்சிருச்சே பாடல் அமைந்துள்ளது. பாடலில் வித்யாசமான தன் நடிப்பினை மேருகேற்றி சாந்தனு நடித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. முன்னதாக இந்த பாடலின் அடுத்த காட்சியான ஊருக்கு நடுவே சிலை யாருக்கு என்ற காட்சியை படம் வெளியாவதற்கு முன்பு படக்குழு வெளியிட்டது குறிப்பிடதக்கது. திரைப்படம் வெளியாகி 5 நாள் நிறைவடைந்த நேரத்திலும் இன்னும் மக்கள் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக சென்று தங்கள் ஆதரவினை இராவண கூட்டம் படத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

முதல் முறையாக தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ‘கேப்டன் மில்லர்’ நடிகர் ஜான் கொக்கன்.. -  இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

முதல் முறையாக தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ‘கேப்டன் மில்லர்’ நடிகர் ஜான் கொக்கன்.. - இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..

சினிமா

"உங்களுக்கெல்லாம் லேகியம் கதைதான்.." ரசிகர்கள் மீது கோபம் கொண்டு எடுத்த படம் இது தான்.. - சுவராஸ்யமான தகவலை பகிர்ந்த இயக்குனர் பாரதிராஜா..

பொன்னியின் செல்வன் 2 பட தயாரிப்பாளருக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை.. பின்னணி என்ன?
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட தயாரிப்பாளருக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை.. பின்னணி என்ன?