தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்! சுவாரஸ்யமான புதிய தகவல் இதோ

தளபதி விஜயின் லியோ படத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து,cricket commentator pradeep muthu onboard in leo movie | Galatta

நாளுக்கு நாள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாரிசு திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு தற்போது தனது திரைப் பயணத்தில் 67-வது திரைப்படமாக தயாராகும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணி இணைந்து இருப்பதாலும், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதாலும் லியோ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இதுவரை லியோ படம் சார்ந்து வெளிவரும் ஒவ்வொரு தகவல்களும் இந்த எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகரிக்க செய்துள்ளன.

இதுபோக தனது விக்ரம் மற்றும் கைதி ஆகிய திரைப்படங்களில் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU யுனிவர்ஸ் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. இந்த யுனிவர்ஸில் தளபதி விஜயின் லியோ படமும் இடம்பெருமா என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா லியோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். லியோ திரைப்படம் தளபதி விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் அவர்களது திரைப் பயணத்தில் 67 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் லியோ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்ச்சியாக 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த கட்டமாக தற்போது சென்னையில் லியோ பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து லியோ திரைப்படத்தில் இணைந்திருப்பதாக ருசிகர தகவல் வெளிவந்துள்ளது. பிரதீப் முத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் முகப்பில் நடிகர் - மீசைய முறுக்கு, வீட்ல விசேஷம், லியோ என குறிப்பிட்டுள்ளதால் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இதனை உறுதி செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியோ படம் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்த பிரதீப் முத்து "மிக மிக சிறிய கதாபாத்திரம் ஒரே ஒரு நாள் தான் படப்பிடிப்பு" எனவும் குறிப்பிட்டிருக்கிறார். பிரதீப் முத்துவின் அந்த பதிவுகள் இதோ…
mirchi shiva yogi babu in kasethan kadavulada release date announcement

விஜய் சேதுபதி - 'விடாமுயற்சி' இயக்குனர் மகிழ் திருமணி - மோகன் ராஜா இணைந்த அதிரடி படம்... கவனம் ஈர்க்கும் விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!
சினிமா

விஜய் சேதுபதி - 'விடாமுயற்சி' இயக்குனர் மகிழ் திருமணி - மோகன் ராஜா இணைந்த அதிரடி படம்... கவனம் ஈர்க்கும் விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!

1990 முதல் 2018 சுவாரசியமான பொன்னியின் செல்வன் பயணம்… முதல் முறை மனம் திறந்த தயாரிப்பாளர் சிவா ஆனந்த்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

1990 முதல் 2018 சுவாரசியமான பொன்னியின் செல்வன் பயணம்… முதல் முறை மனம் திறந்த தயாரிப்பாளர் சிவா ஆனந்த்! ட்ரெண்டிங் வீடியோ

தனது மூத்த மகன்களை இளம் வயதிலேயே பறிகொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார்... இதுவரை வெளிவராத எமோஷனலான வீடியோ இதோ!
சினிமா

தனது மூத்த மகன்களை இளம் வயதிலேயே பறிகொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார்... இதுவரை வெளிவராத எமோஷனலான வீடியோ இதோ!