"ரோபோ காளை" உருவாக்கி வருகிறோம்... சூர்யாவின் வாடிவாசல் பட ஷூட்டிங் எப்போது?- செம்ம மாஸ் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

வாடிவாசல் படத்திற்காக ரோபோ காளை உருவாக்கும் வெற்றிமாறன்,Life size robot in animatronics for suriya vetrimaaran in vaadivaasal | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் - சூர்யா காம்போவின் வாடிவாசல் திரைப்படத்திற்காக பிரத்யேகமாக அனிமேட்ரானிக்ஸ் முறையில் ரோபோ காளை ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தனது திரைப்படங்களால் தமிழ் சினிமாவின் தரத்தை மற்றொரு தளத்திற்கு உயர்த்தி வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விடுதலை பாகம் 1. நகைச்சுவை நடிகராக மக்களை மகிழ்வித்த நடிகர் சூரியை கதையின் நாயகனாக மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை 1 திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து விடுதலை பாகம் 2 திரைப்படம் அடுத்த சில மாதங்களுக்குள் வெளிவர உள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

விடுதலை பாகம் 2 திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவின் வாடிவாசல் , தனுஷின் வடசென்னை 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் ஆகியோரோடு அடுத்தடுத்த படங்களில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்தை பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து நடிகர் சூர்யா - இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இணைய இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் ஜல்லிக்கட்டு மையப்படுத்தி இதுவரை ஜல்லிக்கட்டு குறித்து பெரிதும் பேசப்படாத பக்கங்கள் குறித்து பேச இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை ஜூன் 26 ஆம் தேதி நடைபெற்ற தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கான காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில், வாடிவாசல் படம் குறித்து கேட்கப்போது, "வாடிவாசல் திரைப்படத்தை, விடுதலை 2 படம் முடிந்தவுடன் ஆரம்பித்து விடுவோம். வாடிவாசல் திரைப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. லண்டனில் அனிமேட்ரானிக்ஸ் பணிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த காளைக்கான அனிமேட்ரானிக்ஸ் பணிகளை செய்து வருகிறோம். அதாவது ஒரு ரோபோ, சூர்யா சாரிடம் இருக்கும் அந்த காளையை அப்படியே ஸ்கேன் செய்து அதே மாதிரி ஒரு ரோபோவை உருவாக்கி வருகிறோம். அந்தப் பணிகள் எல்லாம் தற்போது நடைபெற்று வருகின்றன.” என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே வாடிவாசல் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறிருக்கும் சமயத்தில் தற்போது ஆட்சியாளராக ஒரு காளையை அனிமேட்ரானிக்ஸ் முறையில் ரோபோவாக வைத்து படமாக்க இருப்பது இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது.
 

'அஜித்தின் விடாமுயற்சி பட ஷூட்டிங் எப்போது?'- முன்னணி தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்! வீடியோ இதோ
சினிமா

'அஜித்தின் விடாமுயற்சி பட ஷூட்டிங் எப்போது?'- முன்னணி தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்! வீடியோ இதோ

தேவர் மகன் பற்றி மாமன்னன் பட விழாவில் மாரி செல்வராஜ் பேசியது பற்றி நடிகர் சதீஷ் கருத்து! வீடியோ உள்ளே
சினிமா

தேவர் மகன் பற்றி மாமன்னன் பட விழாவில் மாரி செல்வராஜ் பேசியது பற்றி நடிகர் சதீஷ் கருத்து! வீடியோ உள்ளே

RRR நாயகன் ஜூனியர் NTR-ன் அதிரடியான தேவரா… மிரள வைக்கும் பக்கா ஆக்ஷன் காட்சி ஷூட்டிங் பற்றிய மாஸ் அப்டேட் & புது GLIMPSE இதோ
சினிமா

RRR நாயகன் ஜூனியர் NTR-ன் அதிரடியான தேவரா… மிரள வைக்கும் பக்கா ஆக்ஷன் காட்சி ஷூட்டிங் பற்றிய மாஸ் அப்டேட் & புது GLIMPSE இதோ