'லிஸ்ட்ல இன்னும் நெறையா இருக்கு!'- தளபதி விஜயின் லியோ படத்தில் இணைந்த இயக்குனர்கள் பற்றி ரத்னகுமார் கொடுத்த HINT! ருசிகர தகவல் இதோ

லியோ படத்தில் இணைந்த இயக்குனர்கள் பற்றி ரத்னகுமார் கொடுத்த HINT,rathnakumar gives hint on directors in thalapathy vijay leo movie | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இன்னும் நிறைய இருக்கிறது என இயக்குனர் ரத்னகுமார் HINT கொடுத்துள்ளார். இந்திய சினிமாவில் நட்சத்திர நாயகராக திகழும் தளபதி விஜய் அடுத்ததாக முதல் முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது திரை பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாக இருக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக தனது 67 வது திரைப்படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். பக்கா அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக உருவாக்கி வருகிறது. தளபதி விஜய் உடன் இணைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கும் லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது. 

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த லியோ திரைப்படத்தில் மேயாத மான் , ஆடை , குலுகுலு படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். அதேபோல் நடிகர்களாக, மிஷ்கின் , கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய இயக்குனர்கள் நடித்துள்ளனர். அது போக அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோரும் இயக்குனராக படங்களை இயக்கி இருப்பதால் அவர்களும் இந்த இயக்குனர்களின் பட்டியலில் இணைக்கின்றனர். கடந்த சில தினங்களாக அதிகம் பேசப்பட்ட பிரபல பாலிவுட் இயக்குனர் - நடிகர் அனுராக் கஷ்யப் தற்போது லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். எனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களோடு சேர்த்து லியோ திரைப்படத்தில் மொத்தம் 8 இயக்குனர்கள் இணைந்திருப்பதாக குறிப்பிட்டு லியோ “இயக்குனர்களின் பார்ட்டி” என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் இதனை குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ள இயக்குனர் ரத்னகுமார் “லிஸ்டில் இன்னும் நிறைய இருக்கிறது” என குறிப்பிட்டு இருக்கிறார். எனவே இன்னும் சில இயக்குனர்கள் நடிகர்களாக லியோ படத்தில் இணைந்து இருப்பதாக ரத்னகுமார் HINT கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா லியோ திரைப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் யாரெல்லாம் அப்படி இணைந்திருப்பார்கள் என இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை லியோ திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் ரத்ன குமாரின் அந்த பதிவு இதோ…
shanthi talkies released sivakarthikeyan maveeran official censor runtime details

தளபதி விஜயின் லியோ படத்தோடு கைகோர்க்கும் முன்னணி நிறுவனம்... வேற லெவல் ரிலீஸ் அப்டேட் இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தோடு கைகோர்க்கும் முன்னணி நிறுவனம்... வேற லெவல் ரிலீஸ் அப்டேட் இதோ!

50வது படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ்... பக்கா மாஸ் சர்ப்ரைஸாக வந்த D50 பட மிரட்டலான அறிவிப்பு போஸ்டர் இதோ!
சினிமா

50வது படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ்... பக்கா மாஸ் சர்ப்ரைஸாக வந்த D50 பட மிரட்டலான அறிவிப்பு போஸ்டர் இதோ!

மாமன்னன் பட வெற்றி... வடிவேலுவை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை! வீடியோ உள்ளே
சினிமா

மாமன்னன் பட வெற்றி... வடிவேலுவை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை! வீடியோ உள்ளே