தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பட்டி தொட்டி எங்கும் இந்த படம் வசூல் மழை ஈட்டியது.

இதனை அடுத்து அல்லு அர்ஜுன் புஷ்பா,அல்லு அர்ஜுன் 21 படங்களில் நடித்து வருகிரியார்.இவர் நடிக்கும் 21ஆவது படத்தை மிர்ச்சி,பரத் அன்னே நேனு  உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய கொரட்டால சிவா இயக்குகிறார்.இந்த படம் 2022 தொடக்கத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் புஷ்பா படத்தில் தற்போது நடித்து வருகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.இந்த படத்தின் மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..இந்த படத்தின் முதல் பாகம் 2021 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி செம ஹிட் அடித்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் பாடலுக்காக பயிற்சியை தொடங்கியுள்ளதாக ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

rashmika mandanna prepares for song shoot for allu arjun pushpa fahadh faasil