தென்னிந்திய திரையுலகில் முடிசூடா நாயகியாக அசத்தி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தெலுங்கு திரையுலகம் தவிர்த்து தமிழிலும் பிரபலமாக திகழ்கிறார். மகேஷ் பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது. 

தற்போது நடிகை ராஷ்மிகா போலவே உருவ ஒற்றுமை கொண்ட டிக்டாக் நடிகை இணையத்தில் வைரலாகி வருகிறார். எவ்வித மேக்கப்பும் இல்லாமலும் நடிகை ராஷ்மிகாவைப் போன்று தோற்றமளிக்கும் அவரது வீடியோவின் கீழ் பல இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ நடிகை ராஷ்மிகா கண்ணில் பட்டால் ஆச்சர்யமாவார். டிக் டாக், டப்ஸ்மேஷ் போன்ற செயலிகள் சமீபகாலமாக ஏராளமான நடிகர்களையும், கலைஞர்களையும் கண்டெடுத்து உலகத்திற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. டிஜிட்டல் காலத்தில் இவர்களை கண்டுபிடிப்பது மிகவும் எளிமையான காரியமாக மாறிவிட்டது. 

அதிலும் குறிப்பாக டிக் டாக்கில் விஜய், அஜித், ரஜினிகாந்த், நயன்தாரா, தமன்னா, ஐஸ்வர்யா ராய் என நம் மனம் கவர்ந்த நடிகர் நடிகைகளைப் போன்று முக அமைப்பு கொண்ட பலரும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு அசத்துகின்றனர். பிரபலங்களைப் போன்ற உருவ ஒற்றுமை மட்டுமின்றி திறமையும் இருப்பதால் இவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கூட வீடு தேடி வந்து கொண்டிருக்கிறது.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்துள்ளார் ராஷ்மிகா. இதுவே இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. போகரு என்ற கன்னட படம், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவுள்ள புஷ்பா என்ற திரைப்படமும் ராஷ்மிகா கைவசம் உள்ளது. ஒவ்வொரு படத்திலும் எதார்த்தமான குறும்புத்தனமான செயல்களை செய்து ரசிகர்களின் ஆதர்ஷ நாயகியாக திகழும் ராஷ்மிகா, அவரை போல் உள்ள இந்த டிக்டாக் நடிகையை வாழ்த்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

@hazeloutfire

not rent 😁❤️❤️##eyekillergirl ##fyp ##rashmikamandanna ##hazelfamm ##foryoupage ##viral ##tamiltuesday ##tamil ##trending ##edutok @tiktok @tiktok_india

♬ original sound - behindwoods