செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.

மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் ரத்து செய்யப்படுள்ளது.விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான நெஞ்சம் மறப்பதில்லை.சரண்யாவை தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமாகிய தொடர்.அமித் இந்த தொடரின் நாயகனாக நடித்திருந்தார்.இந்த தொடரில் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தனர்.இந்த தொடரின் ஒளிபரப்பு 2017 அக்டோபரில் ஆரம்பித்து 2019 பிப்ரவரியில் நிறைவடைந்தது.

இந்த தொடரில் சரண்யாவின் பெயர் சரண்யா வேல்ராஜ் என்று அமைந்தது.இந்த தொடரில் வரும் சரண்யா வேல்ராஜின் கேரக்டருக்கு கதைப்படி இன்று பிறந்தநாள்.அதனை சரண்யாவின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.இதனை பார்த்த பலரும் சரண்யாவிற்கு இன்று தான் பிறந்தநாள் என்று ஸ்டேட்டஸ்,வாழ்த்து என்று தங்கள் அன்பை பொழிய ஆரம்பித்தனர்.இது குறித்து சரண்யா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.இன்று தனக்கு பிறந்தநாள் இல்லை சீரியலில் வரும் சரண்யா கேரக்டரின் பிறந்ததினம் தான் இன்று,சீரியல் முடிந்து பல நாட்கள் ஆனாலும் நீங்கள் அனைவரும் காட்டும் அன்புக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.