தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று அந்த கண்ண பாத்தாக்கா.

அனிருத் இசையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் தயாராகியுள்ளது இந்த பாடல்.இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடிய இந்த பாடல் ரசிகர்களிடையே நல்லாவே வரவேற்பை பெற்றிருந்தது.இந்த பாடலின் கரோக்கி வெர்ஷன் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இதனை உபயோகித்து ரசிகர்கள் தங்கள் பாடும் திறனை வெளிப்படுத்தி இந்த பாடலை அவர்கள் குரலில் பாடலாம்.இந்த பாடலின் புதிய வெர்ஷன்களை விரைவில் சோசியல் மீடியாக்களில் காணலாம்.அந்த கண்ண பாத்தாக்கா பாடலின் காரோக்கி வெர்ஷனை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழலாம்.