தனது திரை பயணத்தின் முதல் படமான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருக்கும் அனிமல் திரைப்படத்தின் ஹேவான் பாடல் வெளியானது. பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான ரன்பீர் கபூருடன் இணைந்து அணில் கபூர் மற்றும் பாபி தியால் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனிமல் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கிறார். அணில் கபூர் மற்றும் பாபி தியால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனிமல் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான பப்லு பிரித்திவிராஜ் குறிப்பிடப்படும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் திரிப்தி டிமிரி, சக்தி கபூர், சுரேஷ் ஓபிராய் ஆகியோர் அனிமல் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸான அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் அனிமல் திரைப்படத்தின் அதிரடியான ஹேவான் பாடல் தற்போது வெளிவந்துள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அனிமல் படத்தின் ஹேவான் பாடல் இதோ...
கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் தான் அர்ஜுன் ரெட்டி. இதனைத் தொடர்ந்து தமிழில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாக ஆதித்ய வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட அர்ஜுன் ரெட்டி ஹிந்தியில் நடிகர் ஷஹித் கபூர் கதாநாயகனாக நடிக்க கபீர் சிங் என பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டது.அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா கபீர் சிங் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குனராக களமிறங்கினார். அப்படத்தில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மற்றொரு பாலிவுட் திரைப்படத்தை இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். ஆஷிம் கெம்சன் இசையமைத்துள்ள இந்த அனிமல் திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பின்னணி இசை கோர்த்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அமித் ராய் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் அனிமல் திரைப்படத்திற்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த அனிமல் திரைப்படத்தில் துணிவு , கங்குவா உள்ளிட்ட படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கும் சுப்ரீம் சுந்தர் அவர்கள் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படத்தை அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடி வருவதால் பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய வசூல் செய்து வருகிறது.